Realme C63 ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Realme C63 ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

Realme அதன் புதிய Realme C63 போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

இது C சீரிஸில் நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது.

இதன் முழு சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme அதன் புதிய Realme C63 போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இது C சீரிஸில் நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது. இதன் பேட்டரி 5 ஆயிரம் mAh மற்றும் வேகமாக சார்ஜ் 45W ஆகும். இதன் விலை 9 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் இதன் முழு சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme C63 இதன் விலை தகவல்

Realme C63 யின் 4GB + 128GB மாடலின் விலை ரூ.8999. இது லெதர் ப்ளூ மற்றும் ஜேட் கிரீன் வண்ணங்களில் வருகிறது. realme.com மற்றும் Flipkart தவிர, இந்த போனை ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம். ஜூலை 3ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை தொடங்கும்.

Realme C63 டாப் அம்சம்

Realme C63 டிஸ்ப்ளே

Realme C63 யில் 6.74 இன்ச் (1600 x 720) பிக்சல் HD+ IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இதன் ரெப்ராஸ் ரேட் 90HZ இருக்கிறது இந்த போனில் பீக் ப்ரைட்னாஸ் 450 நிட்ஸ் இருக்கிறது

ப்ரோசெசர்

Realme C63 ஆனது Unisock இன் T612 octacore ப்ரோசெசரை கொண்டுள்ளது. Mali-G57 GPU 12 nm ப்ரோசெசருடன் உள்ளது. இது 4ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் நிரம்பியுள்ளது. SD கார்டு மூலம் 2TB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் என்பது சிறப்பு.

கேமரா

இந்த போனில் கேமரா பழ்ற்றி பேசுகையில் இந்த போனில் LED ப்ளாஷ் கொண்ட 50 எம்பி ப்ரைம் பின்புற கேமரா உள்ளது. முன் கேமரா 8 மெகாபிக்சல் இருக்கிறது.

பேட்டரி

இதில் 5 ஆயிரம் mAh பேட்டரி உள்ளது, இது 45 Watt SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பல அம்சங்கள் இருந்தாலும், இது 5ஜி ஸ்மார்ட்போன் இல்லை.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் Realme C63 யில் இரண்டு நானோ சிம்கள் தவிர, SD கார்டுக்கான ஸ்லாட் உள்ளது. இது சமீபத்திய Android 14 யில் இயங்குகிறது, அதில் Realme UI யின் லேயர் உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. போனில் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது.

இதையும் படிங்க: OnePlus Nord CE 4 Lite போனில் 2000 வரையிலான அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo