50MP கேமரா கொண்ட Realme C51 அதிரடியான பல ஆபருடன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது

Updated on 11-Sep-2023
HIGHLIGHTS

சில நாட்களுக்கு முன்பு இந்திய சந்தையில் realme C51 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Realme C51 இன்று மதியம் 12 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த போன் 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 10,999 ரூபாயில் இருக்கும், இதில் ரூ.2,000 தள்ளுபடியுடன் ரூ.8,999க்கு வாங்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு இந்திய  சந்தையில் realme C51 ஸ்மார்ட்போன் அறிமுகம். இந்த போனை பட்ஜெட் செக்மன்டில்  கொண்டு வரப்பட்டுள்ளது,  இதன் சிறப்பம்சங்களை  பற்றி பேசுகையில், இது 4 ஜிபி ரேம், 2 டிபி வரை அதிகரிக்ககூடிய ஸ்டோரேஜ் 5000 Mah பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி பட்ஜெட் ரேஞ்சில் பல நல்ல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இந்த போனின் முதல் விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Realme C51 யின் விலை என்ன மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் என்ன என்பதை  பார்க்கலாம் 

Realme C51 விலை மற்றும் ஆபர்

இந்த போன் 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 10,999 ரூபாயில் இருக்கும், இதில்  ரூ.2,000 தள்ளுபடியுடன் ரூ.8,999க்கு வாங்கலாம். நீங்கள் மேலும் இதை நோ கோஸ்ட் EMI கீழ் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 செலுத்த வேண்டும். பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், Flipkart Axis Bank கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். அதே நேரத்தில், HDFC மற்றும் SBI வங்கி அட்டைகளைப் பயன்படுத்தினால் ரூ.500 தள்ளுபடி வழங்கப்படும். realme C51 கார்பன் பலக் மற்றும் புதினா கிரீன் நிறங்களில் வாங்க முடியும். 

Realme C51 சிறப்பம்சம்

இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரெப்ரஸ் ரேட் 90 ஹர்ட்ஸ் இருக்கிறது, இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒரே ஒரு வேரியண்டில் வருகிறது. இந்த போனில் Unisock T612 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. 

இதில் கேமரா பற்றி பேசுகையில் இது இரட்டை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, அதன் முதல் சென்சார் 50 மெகாபிக்சல்கள். இரண்டாவது 0.08 மெகாபிக்சல்கள். தொலைபேசியில் 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. மேலும், 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இது 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் மினி கேப்சூல் வசதியுடன் வருகிறது. போனில் வேகமான பக்க பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :