ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 22 ஆம் தேதி ரியல்மி 3 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இத்துடன் ஸ்மார்ட்போனிற்கான டீசர் ஒன்றையும் ரியல்மி வெளியிட்டுள்ளது. ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதேவ் சேத் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி 3 ப்ரோ இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
இத்துடன் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
போட்டோக்கள் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க க்ரோமா பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அ்மசம் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி அறிவித்தது.