ஒப்போவின் சப் பிராண்ட் சமீபத்தில் இந்திய சந்தையில் Realme 3 Pro அறிமுகம் செய்தது.இதனை தொடர்ந்து அதன் முதல் விற்பனை திங்கள் கிழமை அன்று வைக்கப்பட்டது இந்த முதல் விற்பனையின் போதே 8 நிமிடத்திற்குள் Realme 3 Pro 1.7 லட்சத்திற்கு யூனிட்டுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதன் அடுத்த சேல் இன்று பகல் 12 மணிக்கு பல அசத்தலான ஆபர்களுடன் விற்பனைக்கு வருகிறது.
புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது மேலும் நீங்கள் இதை HDFC பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 1000ரூபாய் இதனுடன் நீங்கள் இதில் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.
Realme 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD. பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி Volte வைபை, ப்ளூடூத்
– 4045 Mah .பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
அறிமுகத்தின் போது ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரியல்மி 3 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.!
விலை மற்றும் விற்பனை
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது