Realme 3 மீடியாடேக் ஹீலியோ P70 AI SoC உடன் மார்ச் 4 அறிமுகமாகும்..!
ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டு ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
Realme 3 பற்றி தொடர்ந்து பல வதந்தி மற்றும் டீசர் வருகிறது நிறுவனம் சாதனத்திற்க்கு பின் கேமரா மற்றும் டயமண்ட் கட் டிசைன்க்கு பிறகு இப்பொழுது ரியல் மீ CEO Madhav Sheth சாதனத்தில் வரும் சிப்சாட் உறுதி படுத்தியுள்ளது. சமீபத்தில் Realme 3 ஸ்மார்ட்போனில் மீடியா டேக் லேட்டஸ்ட் ஹீலியோ 70 AI SoC கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டு ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
ரியல் மீ யின் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 மாடல்களிலும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனுடன் கவர்ச்சிகரமான கேஸ் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் அழைப்பிதழில் “Power Your Style” எனும் டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செல்லரேஷன் மற்றும் கேமிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.
ரியல்மி 2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile