Realme 3 Pro டூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய டாப் எண்ட் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD. பிளஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் உள்ளிட்டை வழங்கப்பட்டுள்ளது.
கிரேடியண்ட் பேக் கொண்டிருக்கும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், ரியல்மி லோகோ மற்றும் பின்புற கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ SD கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4045Mah பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
இத்துடன் ஹைப்பர்பூஸ்ட் 2.0, டர்போபூஸ்ட் மற்றும் ஃபிரேம்பூஸ்ட், மேம்பட்ட டச் கண்ட்ரோல் மற்றும் ஃபிரேம் ரேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.7, ஏ.ஐ. வசசதி, 64 எம்.பி. அல்ட்ரா ஹெச்.டி. மோட், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 4-இன்-1 சூப்பர் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுக சலுகைகள்:
– முதல் விற்பனையில் செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.1000 தள்ளுபடி
– அதிகபட்சம் ஆறு மாதங்கள் நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது.
– ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,300 மதிப்புள்ள பலன்கள்
– மைஜியோ செயலி மூலம் ரூ.299 ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.1800 வரை உடனடி கேஷ்பேக்
– முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி பட்ஸ் இலவசம்
– மொபிகுவிக் மூலம் பணம் செலுத்துவோருக்கு 15 சதவிகிதம் சூப்பர்கேஷ் கேஷ்பேக்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile