digit zero1 awards

4230Mah பேட்டரி உடன் ரியல் மீ 2 இன்று பகல் 12 மணிக்கு விற்பபனைக்கு வருகிறது…!

4230Mah  பேட்டரி உடன்  ரியல் மீ 2 இன்று பகல் 12 மணிக்கு விற்பபனைக்கு வருகிறது…!
HIGHLIGHTS

இதன் 3GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் வகையின் விலை 8,990 மற்றும் அதன் மற்றொரு வகை 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 10,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

ஒப்போவின் சப் பிரான்ட் ஆன ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனுடன் கால்மி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் நோட்ச்  டிஸ்பிளே  உடன் இருக்கும் ரியல் மீ 2 இன்று  பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு  வருகிறது . இந்த ஸ்மார்ட்போன்  இரண்டு வகையில் அறிமுகமானது அதன் விலை பற்றி பேசினால் அதன் 3GB ரேம் மற்றும் 32 GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 8,990 மற்றும் அதன் மற்றொரு வகை 4GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 10,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. 

புதிய ரியல்மி 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD  பிளஸ் ஸ்கிரீன் 1520×720 பிக்சல் ரெசல்யூஷன், நாட்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமன்ட் கட் டிசைன் கொண்டுள்ள ரியல்மி 2 மாடல் அதிக பிரகாசமாக இருக்கிறது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், கொண்டுள்ளது 

 ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
– 4230 Mah  பேட்டரி

ஆபர்கள் 
– ரியல்மி 2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் HDFC  க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது ரூ.750 தள்ளுபடி பெற முடியும்.
– ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.4200 மதிப்புடைய உடனடி சலுகைகள் மற்றும் 120 ஜிபி கூடுதல் டேட்டா 
– நோ கோஸ்ட் EMI  வசதியும் இருக்கிறது 
– மொபைல் ஸ்கிறீன் ப்ரொடக்சன் 199 மதிப்பில் கிடைக்கிறது மற்றுமிதனுடன் மற்றும் இதில் இலவச ஸ்கிறீன் கேஷ் கிடக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo