Realme யின் புத்தம் புதிய போன் அறிமுகம் விலை மற்றும் டாப் அம்சங்கள் பாருங்க

Updated on 18-Dec-2024
HIGHLIGHTS

Realme இந்திய சந்தையில் அதன் அதன் Realme 14x 5G போனை அறிமுகம் செய்துள்ளது,

Realme 12x யின் அப்க்ரேட் வெர்சன் என கூறப்படுகிறது

Realme 14x 5G இன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999 மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் விலை ரூ.15,999 ஆகும்

Realme இந்திய சந்தையில் அதன் அதன் Realme 14x 5G போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் Realme 12x யின் அப்க்ரேட் வெர்சன் என கூறப்படுகிறது, மேலும் இந்த போன் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Realme 14x 5G விலை

Realme 14x 5G இன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999 மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. வெளியீட்டு சலுகையின் கீழ், அனைத்து வங்கிகளின் கார்டுகளிலிருந்தும் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, தொலைபேசி கிரிஸ்டல் பிளாக், கோல்ட் க்ளோ மற்றும் ஜூவல் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

Realme 14x 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-Realme 14x 5G போனில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே HD+ உடன் இதில் 1604 X 720 பிக்சல் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது

ப்ரோசெசர் :-இந்த போனில் , ARM Mali G57 MC2 GPU உடன் MediaTek Dimansity 6300 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 யில் வேலை செய்கிறது. நிறுவனம் இரண்டு OS அப்டேட்களை உறுதியளிக்கிறது.

Realme 14x 5G

ரேம் ஸ்டோரேஜ்:-இந்த ஃபோன் 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் மாடல்களில் கிடைக்கிறது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்க முடியும். இது 10 ஜிபி வரை வெர்சுவல் ரேம் சப்போர்டையும் கொண்டுள்ளது.

கேமரா :- கேமரா செட்டப் பற்றி பேசுகையில், Realme 14x 5G யின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி :-இப்பொழுது பேட்டரி பற்றி பேசுகையில் இந்த ஃபோனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,000mAh பேட்டரி உள்ளது.

கனெக்டிவிட்டி:-கனேக்ட்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். உடல் தொடுதல் இல்லாமல் ஃபோனைக் கட்டுப்படுத்தும் காற்று சைகையை இந்த ஃபோன் ஆதரிக்கிறது. பாதுகாப்பு, நீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பதற்கான IP69 ரேட்டிங் , நீடித்து நிலைத்திருப்பதற்கான ArmorShell பாதுகாப்பு மற்றும் வாட்டார் மழைநீர் ஸ்மார்ட் டச் ஆகியவை அடங்கும்.

டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 165.7 mm, அகலம் 76.2 mm, திக்னஸ் 7.94 mm மற்றும் எடை 197 கிராம்.

இதையும் படிங்க: Lava யின் புதிய போன் டுயல் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் விலை மற்றும் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :