Realme 13 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்பே தகவல் வெளியானது

Updated on 13-Aug-2024
HIGHLIGHTS

Realme யின் Realme 13 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்

இதில் Realme 13 மற்றும் Reame 13+ ஆகியவை அடங்கும்.

இந்தத் சீரிஸில் ஸ்மார்ட்போன்கள் குறித்து சில லீக் தகவல்கள் கிடைத்துள்ளன.

பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Realme யின் Realme 13 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இதில் Realme 13 மற்றும் Reame 13+ ஆகியவை அடங்கும். கடந்த மாதம் நிறுவனம் Realme 13 Pro ஐ அறிமுகப்படுத்தியது. இந்தத் சீரிஸில் ஸ்மார்ட்போன்கள் குறித்து சில லீக் தகவல்கள் கிடைத்துள்ளன.

Realme 13 Series இந்திய அறிமுகம் தகவல்

Realme யின் அதிகாரபூர்வ ட்விட்டர் x பக்கத்தில் Realme 13 யின் தகவல் டீஸ் செய்யப்பட்டுள்ளது டீஸர் நம்பர் 13 ஐக் காட்டுகிறது, “வேகத்திற்கு புதிய நம்பர் உள்ளது”. இது வேக டிரினிட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: சிப்செட், மெமரி மற்றும் சார்ஜிங், ஸ்மார்ட்போனின் பர்போமான்ஸ் மூன்று முக்கிய பகுதிகள்.பாதிக்கும்

விவரங்களின் அடிப்படையில் அதிகம் அறியப்படவில்லை என்றாலும், சமீபத்திய வாரங்களில் ஸ்மார்ட்போன் சீரிஸ் பல கசிவுகளில் தோன்றியுள்ளது, இதில் சீனாவின் TENAA டேட்டா தளத்தில் கீக்பெஞ்சிலும் Realme 13+ யின் பார்வைகள் அடங்கும். டீசரில், இது “டர்போவின் D7200 சிப்செட்டை விட வேகமாக இருக்கும்” என்று Realme கூறுகிறது.

Realme 13 Series எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்

TENAA கிடைத்த தகவலின் படி பார்த்தல் Realme 13 யில் 6.72-இன்ச் LTPS ஸ்க்ரீன் முழு LTPS ஸ்க்ரீன் உடன் முழு HD+ ரெசளுசனுடன் வருகிறது இது octa-core சிப்செட்டுடன் 2.2GHz ப்ரீகுவன்ஷி உடன் வரலாம் இதை தவிர இந்த போன் நான்கு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஒப்சனில் வரலாம் மேலும் இதில் ஹை எண்டு மாடலாக 16GB+1TB டாப் எண்டு வேரியன்டாக இருக்கும்.

இந்த போனில் கேமரா பற்றி பேசினால், இரட்டை பின் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகபிக்சல் செகண்டரி கேமரா இருக்கிறது இதை தவிர Realme 13 யில் பேட்டரி 4,880mAh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது

அதுவே Realme 13+ பற்றி பேசினால் இதில் ஒரு 6.67 இன்ச் HD+ AMOLED ஸ்க்ரீன் உடன் வரும் இதில் ஆக்டாகோர் ப்ரோசெசர் இதில் கொடுக்கலாம். Realme 13+ 5G ஆனது 6 GB, 8 GB, 12 GB மற்றும் 16 GB RAM வகைகளிலும் 128 GB, 256 GB, 512 GB மற்றும் 1 TB ஸ்டோரேஜ் விருப்பங்களிலும் கிடைக்கப்பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா அலகு இருக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் கேமராவை அதன் முன்பக்கத்தில் காணலாம். இந்த ஸ்மார்ட்போனின் 5,000 mAh பேட்டரியானது 45 W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் இருக்கும். இது செக்யுரிட்டிகாக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனருடன் வழங்கப்படலாம். கடந்த சில ஆண்டுகளில் Realme ஸ்மார்ட்போன்களின் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:Tecno POP 9 தகவல் லீக் விரைவில் அறிமுகமாகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :