Realme 13 Pro 5G சீரிஸ் போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க

Realme 13 Pro 5G சீரிஸ் போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Realme 13 Pro 5G சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் நிறுவனம் realme 13 Pro மற்றும் realme 13 Pro+ 5G போனை அறிமுகம் செய்து;ள்ளது.

கேமராக்கள் AI உடன் இணைந்து சிறந்த புகைப்படத்தை வழங்குவதாக Realme கூறுகிறது.

Realme 13 Pro 5G சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிறுவனம் realme 13 Pro மற்றும் realme 13 Pro+ 5G போனை அறிமுகம் செய்து;ள்ளது. இந்த ஃபோன்களில் வழங்கப்பட்டுள்ள கேமராக்கள் AI உடன் இணைந்து சிறந்த புகைப்படத்தை வழங்குவதாக Realme கூறுகிறது. புதிய Realme ஃபோன்கள் 12 GB RAM உடன் வருகின்றன. Realme 13 Pro+ இல் 5200 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இது 80 வாட் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. புதிய Realme தொடரின் விலைகள் ரூ.26999 முதல் தொடங்குகிறது. ஒவ்வொரு மாடலின் விலை மற்றும் விரிவான அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

realme 13 Pro, realme 13 Pro+ விலை தகவல்.

realme 13 Pro ஆனது Monet Gold, Monet Purple மற்றும் Emerald Green வண்ணங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.26,999. நிறுவனம் ரூ.3 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது, இதன் காரணமாக போனின் விலை ரூ.23999 ஆகிறது.

realme 13 Proயின் யின் 8GB+256GB மாடலின் விலை 28,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது , இதன் ஆபருக்கு பிறகு 25999க்கான வாங்கலாம் . இதேபோல், ரூ.31999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 12ஜிபி+512ஜிபி மாடல், சலுகைக்குப் பிறகு ரூ.28999க்கு கிடைக்கிறது.

realme 13 Pro+ ஆனது Monet Gold மற்றும் Emerald Green வண்ணங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.32,999. நிறுவனம் ரூ.3 ஆயிரம் சலுகையை கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் போனின் விலை ரூ.29,999 ஆக உள்ளது.

realme 13 Pro+ யின் 12GB+256GB மாடல் ரூ.34,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, சலுகைக்குப் பிறகு ரூ.31999க்கு வாங்கலாம். இதேபோல், ரூ.36,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 12ஜிபி+512ஜிபி மாடல், சலுகைக்குப் பிறகு ரூ.33,999க்கு கிடைக்கிறது.

இந்த இரண்டு போன்களின் விற்பனை அலி பர்டில் இரண்டு போன்களின் விற்பனை இன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கும். முன்கூட்டிய ஆர்டர்கள் ஜூலை 31 அன்று மதியம் 12 மணிக்கு realme.com மற்றும் Flipkart யில் செய்யப்படும். ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்கும்.

realme 13 Pro, realme 13 Pro+ சிறப்பம்சம்.

Realme 13 Pro

Realme 13 Pro சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.7-inch OLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்கப்படுகிறது இதை தவிர Realme 13 Pro யில் Qualcomm Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் உடன் வருகிறது.

கேமராவை பற்றி பேசினால், Realme 13 Pro யில் 50MP OIS யின் மெயின் கேமராவுடன் முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது

இதில் 5200mAh பேட்டரியுடன் 45W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Realme 13 Pro+

Realme 13 Pro+ யில் வரும் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரேப்ராஸ் ரேட் உடன் இதில் Qualcomm Snapdragon 7s Gen 2 சிப்செட் வழங்கப்படுகிறது.

மேலும் 13 Pro+ போனில் 50MP ப்ரைமரி கேமரா 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் கேமராவுடன் முன்பக்கத்தில் செல்பிக்கு 32MP மேகபிக்சல் கெமர கொடுக்கப்பட்டுள்ளது

இதன் பேட்டரி பற்றி பேசுகையில் Realme 13 Pro+ யில் 5200mAh பேட்டரியுடன் 80W சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது

AI features

Realme 13 Pro 5G தொடரின் AI அம்சங்களில் AI அல்ட்ரா கிளாரிட்டி, AI குரூப் போட்டோ மேம்பாடு, AI ஸ்மார்ட் ரிமூவல் மற்றும் AI ஆடியோ ஜூம் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:Nothing Phone 2a Plus டிசைன் உட்பட பல தகவல் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo