Realme 13 5G சீரிஸ் இந்தைவில் அடுத்த வாரம் களத்தில் இறக்க உள்ளது இதில் என்ன அம்சம் இருக்கும்
ealme 13 5G சீரிஸ் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவில் Realme 13 சீரிசை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது
இந்த போனில் MediaTek Dimensity 7300 எனர்ஜி SoC உடன் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
ealme 13 5G சீரிஸ் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரியல்மீ தனது அதிகாரப்பூர்வ ட்வீட் மற்றும் மீடியா அழைப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. பிராண்ட் Realme 13 5G சீரிஸ் மட்டுமே குறிப்பிட்டிருந்தாலும், இதில் Realme 13 மற்றும் Realme 13+ ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கலாம், இது முறையே ரியல்மீ 12 மற்றும் ரியல்மீ 12+ ஆகியவற்றின் வாரிசுகளாக இருக்கும். வரவிருக்கும் வரிசையின் இந்த போனில் MediaTek Dimensity 7300 எனர்ஜி SoC உடன் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Realme 13 5G series அறிமுக தேதி
சீன தொழில்நுட்ப பிராண்ட் ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவில் ரியல்மீ 13 சீரிசை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. வெளியீட்டு விழா மதியம் 12 மணிக்கு தொடங்கும். நிறுவனம் தனது X பக்கத்தின் மூலம் வெளியீட்டை டீஸ் செய்து வருகிறது. இது தவிர, வெளியீட்டு தேதியை வெளிப்படுத்தும் எக்ஸ்க்ளுசிவ் மைக்ரோசைட்டையும் அதன் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அறிமுகம் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளைப் பெற பதிவு செய்யலாம்.
Experience the speed trio, top chipset, rapid charging, and massive storage to always stay ahead of the game. #UnmatchedSpeed meets unstoppable performance with the #realme13Series5G.
— realme (@realmeIndia) August 20, 2024
Know more: https://t.co/Q9GsYfxqut pic.twitter.com/FB7BB3h2dR
மீடியா டெக் டைமன்ஷன் எனர்ஜி சிப்செட்டுடன் வரும் முதல் போன்களாக ரியல்மி 13 சீரிஸ் இருக்கும் என்று ரியல்மி கூறுகிறது. இந்த புதிய சிப்செட் 4nm பர்போமான்சின் அடிப்படையாகக் கொண்டது மற்றும் AnTuTu பெஞ்ச்மார்க்கில் 7,50,000 புள்ளிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறைந்த சக்தி நுகர்வு மற்றும் ஸ்டேண்டர்டான ஹை-பிரேம்-ரேட் கேமிங்குடன் வலுவான பர்போமன்சை வழங்குவதாக கூறப்படுகிறது.
ரியல்மீ ஆல் பகிரப்பட்ட டீஸர் படத்தைப் பார்த்தால், ரியல்மீ 13 5G சீரிஸ் பச்சை மற்றும் தங்க வண்ண விருப்பங்களில் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும். இந்த போன்களில் ரியல்மீ 12 சீரிஸ் போன்ற வட்ட வடிவ கேமரா செட்டிங் இருக்கும் என்று தெரிகிறது. இது ரியல்மீயின் வெப்சைட் Flipkart மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்குவதற்கு கிடைக்கும்.
Realme 13+ 5G, Realme 13 5G எதிர்பர்க்கபடும் அம்சம்.
Realme 13+ 5G ஆனது சீனாவின் TENNA இணையதளத்தில் RMX5002 என்ற மாடல் எண்ணுடன் முன்பு காணப்பட்டது. பட்டியலின் படி, இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ரியல்மீ UI 5 உடன் வரும் மற்றும் 6.67-இன்ச் முழு HD+ AMOLED திரையைக் கொண்டிருக்கும். இது 6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் விருப்பங்கள் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கலாம். இது 50MP பிரைமரி மற்றும் 2MP செகண்டரி சென்சார் அடங்கிய டூயல் ரியர் கேமரா யூனிட்டைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 16MP முன் கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: iPhone 16 Pro இந்தியா அதாவது நம்ம தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile