Realme 12X 5G அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் அம்பலமாகியது
Realme 12X 5G ஏப்ரல் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ealme 12X 5G ஆனது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பெறும்.
Realme 12X மார்ச் 21 அன்று சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Realme 12X 5G ஏப்ரல் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, வரவிருக்கும் Realme ஸ்மார்ட்போனின் விலை ரேன்ஜ் மற்றும் சாப்ட்வேர் விவரங்களை Realme வெளியிட்டுள்ளது. Realme 12X 5G ஆனது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பெறும். இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் முழு-HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது MediaTek Dimensity 6100+ SoC இல் இயங்குவதற்கும் டீஸ் செய்யப்படுகிறது. Realme 12X மார்ச் 21 அன்று சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Realme 12x 5G Price Range
ஒரு ப்ரெஸ் ரிலீஸ் மூலம், சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் Realme 12X 5G இன் விலை ரேன்ஜ் பற்றிய தகவலை வழங்கியுள்ளது. வரவிருக்கும் போன் இந்தியாவில் சுமார் 12,000 ரூபாய்க்கு வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
No wonder, it was a well kept secret!💪
— realme (@realmeIndia) March 27, 2024
Unlock the power of #EntryLevel5GKiller, India’s first 45W 5G phone under 12K!
Launching on 2nd April, 12 Noon
Know more: https://t.co/cwWdl8GHSJ#realme12x5G pic.twitter.com/Ui2CWmijxN
12x Confirmed Specs
இது தவிர, அதன் சாப்ட்வேர் பற்றிய தகவல்களும் பகிரப்பட்டுள்ளன. வரவிருக்கும் Realme ஸ்மார்ட்போன் 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. போனனது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 950 nits ஹை ப்ரைட்னஸ் உடன் 6.72-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது தவிர டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் 7.69 mm திக்னஸ் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த போன் ரூ.12000 விலை பிரிவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் 5G போன் ஆகும், இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இரட்டை ஸ்பீக்கர்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
சீன வேரியண்டை போலவே, Realme 12X 5G இன் இந்திய வேரியன்ட் 6nm MediaTek Dimensity 6100+ 5G சிப்செட்டில் VC குளிர்ச்சியுடன் இயங்கும். இது 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் IP54-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இது தவிர, போனில் இரட்டை பின்புற கேமரா செட்டிங்குடன் air ஜெஸ்வர் அம்சம் இருக்கும், இது பயனர்கள் பிசிக்கல் டச் இல்லாமல் போனை நேவிகேட் அனுமதிக்கும்.
Realme 12X 5G இந்தியாவில் ஏப்ரல் 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று Realme ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் விற்பனை Flipkart மற்றும் Realme India இணையதளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் இணையதளம் மற்றும் நிறுவனத்தின் இந்தியா வெப்சைட்டில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் தொடங்கப்பட்டுள்ளது, அங்கு வரவிருக்கும் போனின் அம்சங்களை நிறுவனம் தொடர்ந்து டீஸ் செய்து வருகிறது.
இதையும் படிங்க:iPhone 16 யின் டிசைன் மாற்றம் இருக்கும் போன் கேஸ் லீக்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile