Realme 12, Realme 12+ இந்தியாவில் அறிமுக தேதி வெளியானது
ரியல்மி நிறுவனம் Realme 12 மற்றும் Realme 12+ ஸ்மார்ட்போன்களை மார்ச் 6 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. Realme 12+ யின் சிறப்பம்சங்கள் முன்னர் வெளிப்படுத்திய டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போரின் லீகிலிருந்து இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. ரியல்மி 12 Pro+ மற்றும் 12+ 5G மாடல் 29 பிப்ரவரி 2024 மலேசியாவில் அறிமுகமாகும், ரியல்மி 12+ 5G பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme யின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
Realme 12, Realme 12+ அறிமுக தகவல்
ரியல்மி யின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களான Realme 12 மற்றும் Realme 12+ ஆகியவை மார்ச் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் தெரிவித்தார்.
Exclusive: Realme 12 and Realme 12+ smartphones will be launching in India on 6th March at 12:00 PM.
— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) February 19, 2024
Unless Realme makes any last-minute changes. pic.twitter.com/sv94qJovL8
ரியல்மி 12+ சிறப்பம்சம்
லீக் பற்றி பேசினால், ரியல்மி 12 யில் 6.67 இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது, கேமரா செட்டப் பற்றி பேசினால், இந்த போனின் பின்புறத்தில் OIS சப்போர்ட் கொண்ட 50மேகபிக்சல் ப்ரைமரி கேமரா 8 மேகபிக்சல் அல்ட்ராவைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமராவும் கொண்டுள்ளது, இதை தவிர இதில் செல்பிக்கு 16 மேகபிக்சல் கேமரா இருக்கிறது.
Realme 12+ யில் MediaTek Dimensity 7050 SoC கிடைக்கும் என நம்பப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி இருக்கும். சேமிப்பகத்தைப் பற்றி பேசுகையில், ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி UI 5.0 யில் இயங்கும். பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், போனில் நீளம் 163 மிமீ, அகலம் 75.5 mm திக்னஸ் 7.9 mm மற்றும் எடை 190 கிராம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Jio யின்புதிய பிளான் அன்லிமிடெட் காலிங் உடன்14 OTT பல நன்மை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile