Realme 12 Pro Series அறிமுகம் இதன் விலை தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்

Updated on 30-Jan-2024
HIGHLIGHTS

Realme தனது Realme 12 Pro சீரிஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன்களும் பல புதிய அம்சங்கள் மற்றும் பர்போமான்ஸ் அப்டேட்கள் கொண்டு வந்துள்ளன.

Realme 12 Pro யின் 8GB/128GB வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.25,999 ஆகவும், 8GB/256GB மாடல் ரூ.26,999 விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ரியல்மி தனது Realme 12 Pro சீரிஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் பல புதிய அம்சங்கள் மற்றும் பர்போமான்ஸ் அப்டேட்கள் கொண்டு வந்துள்ளன. Realme 12 Pro மற்றும் 12 Pro+ ஆகிய இரண்டு மாடல்களும் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வேகன் ஃபாக்ஸ் லெதர் டிசைன் மற்றும் முந்தைய ஜெனரேசன் ரியல்மி 11 Pro சீரிஸைப் போலவே இருக்கும் சர்குலர் கேமரா மாட்யூலுடன் வருகின்றன.

Realme 12 Pro Series 5G: Price, Sale Details

ரியல்மி 12 Pro யின் 8GB/128GB வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.25,999 ஆகவும், 8GB/256GB மாடல் ரூ.26,999 விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. வேரியன்ட் 12 ப்ரோ+ ஸ்மார்ட்போன் 8ஜிபி/128ஜிபி வேரியன்ட் விலை ரூ.29,999, 8ஜிபி/256ஜிபி விலை ரூ.31,999 மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி/256ஜிபி வேரியன்ட் ரூ.33,999. ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்களின் முதல் விற்பனை பிப்ரவரி 6 முதல் மதியம் 12 மணிக்கு தொடங்கும், மேலும் அவை Flipkart, ரியல்மி யின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் பிற ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்குவதற்கு கிடைக்கும். ஆனால் அதற்கு முன், இந்த போன்களின் ஆரம்ப அக்சஸ் விற்பனை இன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும், இதில் வாடிக்கையாளர்கள் ICICI வழங்கும் ரூ. 2000 பேங்க் தள்ளுபடி, 12 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ் ஆகியவற்றைப் வழங்குகிறது 1000 போனஸ் கிடைக்கும். இது மட்டுமின்றி, ரூ.1799 விலையுள்ள Realme Wireless 3 ஆனது ரூ.999க்கு மட்டுமே வழங்கப்படும்.

Realme 12 Pro 5G: சிறப்பம்சம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் கர்வ்ட் AMOLED FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. சிறந்த பர்போமன்சுக்காக இது octa-core Qualcomm Snapdragon 6 Gen 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, போனை இயக்க, 67W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் மேலும் இதில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Realme 12 Pro 5G

இப்போது கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், இந்த போனில் 50MP Sony IMX890 முதன்மை சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 32MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:WhatsApp பயர்களுக்கு அதிர்ச்சி இனி இதுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

12 Pro+ 5G:சிறப்பம்சம்

மறுபுறம், 12 Pro+ மாடல் Qualcomm Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. போட்டோ எடுப்பதற்கு, இது மேம்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது, இதில் OIS உடன் 50MP Sony IMX890 ப்ரைமரி சென்சார் உள்ளது. இதை சப்போர்ட் செய்யும் வகையில் இந்த அமைப்பில் 3x ஆப்டிகல் ஜூம், 6x யின் -சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 64MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி சிறப்பம்சங்கள் ப்ரோ மாடலைப் போலவே உள்ளன.

இது தவிர, சாப்ட்வேர் பொறுத்தவரை, இரண்டு போன்களும் Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட realme UI 5.0 யில் வேலை செய்கின்றன. செக்யுரிட்டிக்காக இரண்டு போன்களும் வசதியான இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் வருகின்றன. இந்த போன்களின் டிசைனின் அடிப்படையில் தங்களை வேறுபடுத்திக் கொள்கின்றன. ஸ்மார்ட்போன்கள் இரண்டு கலர் விருப்பங்கள்; நேவிகேட்டர் விதை மற்றும் சப்மரைனர் ப்ளூவில் கிடைக்கிறது, அதே சமயம் ப்ரோ+ மாடல் எக்ஸ்ப்ளோரர் ரெட் நிறத்தில் மூன்றாவது நிறத்தைப் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :