Realme 12 4G அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்

Realme 12 4G அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்
HIGHLIGHTS

Realme அதன் Realme 12 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் அறிமுகம் செய்தது

தற்பொழுது அதன் 5G மாடலை அறிமுகம் செய்தது

Realme 12 4G யின் சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே லீக் ஆகியுள்ளது

Realme அதன் Realme 12 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் அறிமுகம் செய்தது நிறுவனம் தற்பொழுது அதன் 5G மாடலை அறிமுகம் செய்தது, ஆனால் இப்பொழுது நிறுவனம் அதன் 4G மாடல் கொண்டு வருகிறது Realme 12 4G அறிமுகத்திற்க்கு முன்பே அதன் சிறப்பம்சம் லீக் ஆகியுள்ளது, இந்த போனில் 50MP மெயின் கேமரா இருக்கும் எனக்கூறப்படுகிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே இருக்கும், இதை தவிர இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் சரி வாருங்கள் இதன் அணித்து தகவலை பற்றி பார்க்கலாம்.

Realme 12 4G யின் சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே லீக் ஆகியுள்ளது ஃபோனின் அனைத்து முக்கிய சிறப்பம்சங்களும் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி சோசியல் மீடியா தளமான X யின் ஒரு போஸ்ட்டின் மூலம் பகிர்ந்துள்ளார். Realme 12 4G இன் டிசைன் சீரிச்ன் மற்ற மாடல்களைப் போலவே இருக்கும். இதன் பின்புறத்தில் வட்ட வடிவ கேமரா மாட்யூல் இருக்கும். இதில் முக்கிய சென்சார் 50 மெகாபிக்சல் Sony LYT-600 ஆக இருக்கும். இதனுடன், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஃபோனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும், இது 120Hz ரெப்ராஸ் ரெட்டை கொண்டிருக்கும். போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதன் மேற்புறத்தில் ஒரு பஞ்ச் ஹோல் கட்அவுட் உள்ளது, அதில் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. போனில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 685 4ஜி சிப்செட் இருப்பதாக டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் இருக்கும். இது Android 14 அடிப்படையிலான Realme UI 5.0 யில் இயங்கும்.

இந்த போனில் 5000Mah பேட்டரி இருக்கும் இதனுடம் இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் இருக்கும், ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் தொழில்நுட்பம் போனில் காணப்படுவதால், மழையில் நனைந்தால் போனை இயக்க முடியும். ஃபோனை வாட்டர் ரெசிஸ்டண்ட் செய்ய, அது IP54 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். இந்தியாவில் போனின் விலை குறித்து, டிப்ஸ்டர் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை வெளியிடலாம் என்று கூறியுள்ளது. இதன் விற்பனை ஜூன் 7 முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க Nothing Phone 2a யின் Special Edition அறிமுகம் அப்படி என்ன ஸ்பெசல் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo