Realme 11 Pro vs Realme 11 Pro+ யில் இருக்கும் பெரிய வித்யாசம் என்ன, இந்த விலையில் வாங்கலாம்?

Realme 11 Pro vs Realme 11 Pro+ யில் இருக்கும் பெரிய வித்யாசம் என்ன, இந்த விலையில் வாங்கலாம்?
HIGHLIGHTS

Realme 11 Pro+ 5G போன் இந்தியாவில் ஜூன் 15 தேதி விற்பனைக்கு வருகிறது

Realme 11 Pro ஜூன் 16 அன்று விற்பனைக்கு வரும்

Realme 11 Pro ப்ளஸில் ட்ரிப்பில் கேமரா மற்றும் Realme 11 Pro வில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

Realme 11 Pro+ 5G போன் இந்தியாவில் ஜூன் 15 தேதி விற்பனைக்கு வருகிறது அதன் மற்றொன்று Realme 11 Pro ஜூன் 16 அன்று விற்பனைக்கு வரும், இந்த இரு போன்களிலும் ஒரு சில வித்தியாசங்கள் தான் இருக்கிறது  Realme 11 Pro vs Realme 11 Pro+ ஏன் விலையில் வித்தியாசம் தெரிஞ்சிக்கலாம் வாங்க.

1 Realme 11 Pro VS Realme Pro+ யின் ஒப்பீடு.

Realme 11 Pro ப்ளஸில் ட்ரிப்பில் கேமரா மற்றும்  Realme 11 Pro வில் டுயல்  கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. Realme 11 Pro Plus ஆனது 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது இந்த கேமராவில் சாம்சங்கின் ISOCELL HP3 சென்சார் வழங்கப்படுகிறது அதுவே இதன் மறுபக்கம்  100 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கிடைக்கிறது

செல்பி கேமரா பற்றி பேசுகையில் Realme 11 Pro Plus யில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும், Realme 11 Pro உடன் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கிடைக்கிறது.

இந்த இரு போனிலும் PDAF ஆட்டோபோக்கஸ் மற்றும் OIS கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதில் 4K30 fps வீடியோ சூட் செய்ய முடியும்.

2 இரண்டாவதாக இருக்கும் மிக பெரிய வித்தியாசம் சார்ஜிங்  ஸ்பீட்.

Realme 11 Pro சீரிஸின் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த இரண்டிலும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இதனுடன் Realme 11 Pro ப்ளஸில் 100W SuperVOOC சார்ஜிங் வசதியுடன் வருகிறது மற்றும் Realme 11 Pro வில் 67 W பாஸ்ட் சார்ஜிங்  வசதியுடன் வருகிறது. Pro+ போனில் ஸிரோலிருந்து 26 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகி  விடுகிறது  இந்த இரு போனுக்கு  சார்ஜிங் வித்தியாசத்தில் நீங்கள் எதை விரும்புவீர்கள்.

இருப்பினும் இதிலிருக்கும் கூடுதல் அம்சங்களை பற்றி நீங்கள் நினைக்கவில்லை என்றால் இதில் இருக்கும் மற்ற அம்சங்கள் பொறுத்தவரை ஒரே மாதிரியான 5000mAh  பேட்டரி  மற்றும் இதில் 120Hz AMOLED  டிஸ்பிளே இதனுடன் இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையின் கீழ் Realme UI 4.0 சாப்ட்வெர்  வழங்கப்படுகிறது இதில் MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் இருக்கிறது கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில்  WiFi 6, ப்ளூடூத் 5.2, USB-C போர்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் இரு போனிலும்  3.5mm ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது 

விலை தகவல் 

Realme 11 Pro Plus யின் 8/256 GB வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும், 12/256 GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.29,999 ஆகும்.

Realme 11 ப்ரோவின் 8/128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.23,999, 8/256ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.24,999 மற்றும் 12/256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.27,999. Realme 11 Pro ஆகவும் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo