ஒரு இந்திய டிப்ஸ்டர் படி Realme 11 Pro சீரிஸ் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதன் இந்திய மாடலின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரக்குறிப்புகள் லீக் செய்துள்ளது. Realme 11 சீரிஸ் மூன்று மாடல்களும் இந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர், Realme 11 Pro தொடரின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரக்குறிப்புகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இரண்டு போன்களும் ஜூன் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். இந்த போன்கள் பல சமீபத்திய அம்சங்களை உள்ளடக்கியிருக்கும். Realme 11 Pro மற்றும் 11 Pro+ இன் மூன்று சிறப்பு 3 அம்சங்களைப் பார்ப்போம்…
வதந்திகளின்படி, Realme 11 Pro ஆனது 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் , 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆகிய மெமரி வகைகளில் வழங்கப்படும்.
அதுவே Realme 11 Pro+ 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 2GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் கான்பிகரேஷன் உடன் வருகிறது.இரண்டு சாதனங்களும் ஆஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பீஜ் மற்றும் ஒயாசிஸ் கிரீன் வண்ண விருப்பங்களில் வர வாய்ப்புள்ளது.
இந்த இரு ஸ்மார்ட்போனிலும் 6.7- இன்ச் முழு -HD+ கர்வ்ட் பேணலுடன் வருகிறது, இது 360Hz 360Hz டச் செம்பளிங் ரேட்டை வழங்குகிறது, இதில் 12GB வரையிலான ரேம் மற்றும் ஒரு ஒக்ட்டா கோர் 6nm மீடியாடெக் டிமென்சிட்டி 7050 சிப்செட் அடங்கியுள்ளது.
Realme 11 Pro யின் இரட்டை பின்புற கேமரா அமைப்பில் 100MP முதன்மை கேமரா உள்ளது. அதேசமயம் 200எம்பி சாம்சங் ஹெச்பி3 பிரைமரி சென்சார் 11 ப்ரோ+ ட்ரிபிள் பேக் கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் ஆரம்பத்தில் Realme 11 Pro மற்றும் Realme 11 Pro+ ஸ்மார்ட்போனின் விலை CNY 1,699 9 (சுமார் ரூ 20,000) மற்றும் CNY 1,999 (சுமார் ரூ 24,000 ஆரமப விலயில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.