200MP கேமராவுடன் Realme 11 Pro Series அறிமுகமானது, இதன் சுவாரசியம் என்ன?

Updated on 08-Jun-2023
HIGHLIGHTS

Realme 11 Pro மற்றும் Realme 11 Pro+ அறிமுகம் செய்தது

ealme 11 Pro Plus யின் ஓபன் சேல் ஜூன் 15 அன்று மதியம் 12 மணிக்கு Realme Store மற்றும் Flipkart யில் தொடங்கும்.

. Realme 11 Pro யின் ஓபன் சேல் ஜூன் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

ஸ்மார்ட்போன் ப்ரண்டனா ரியல்மி அதன் பியா சீரிஸ்  Realme 11 ProSeries  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்த சீரிஸின் கீழ் Realme 11 Pro மற்றும் Realme 11 Pro+ அறிமுகம் செய்தது, இது கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் ஆஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பீஜ் மற்றும் ஒயாசிஸ் க்ரீன் வண்ணங்களில் வழங்கப்படுகின்றன, கடைசி இரண்டும் வேகன் லெதர் பினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது..

Realme 11 Pro Series விலை தகவல்.

இந்தியாவில் Realme 11 Pro Plus யின் 8/256 GB வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும், 12/256 GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.29,999 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது. Realme 11 Pro Plus யின் ஓபன் சேல் ஜூன் 15 அன்று மதியம் 12 மணிக்கு Realme Store மற்றும் Flipkart யில் தொடங்கும்.

அதே நேரத்தில், Realme 11 ப்ரோவின் 8/128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.23,999, 8/256ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.24,999 மற்றும் டாப்-எண்ட் 12/256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.27,999. Realme 11 Pro யின் ஓபன் சேல் ஜூன் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

Realme 11 Pro Series சிறப்பம்சம்.

Realme 11 Pro மற்றும் Realme 11 Pro ப்ளஸ் இரண்டிலும் ஒரே மாதிரியான சிறப்பம்சத்துடன் வருகிறது, ஆனால் இதில் பேட்டரி மற்றும் வித்தியாசம் இருக்கிறது.Realme 11 Pro மற்றும் Realme 11 Pro Plus ஆகியவை 6.7-இன்ச் FullHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது, இது 120Hz அப்டேட் வீதத்துடன் வருகிறது. MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் மற்றும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 ஆகிய இரண்டு போன்களிலும் வேலை செய்கிறது. ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர், டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.

போனின் கேமரா பற்றி பேசுகையில்  Realme 11 Pro ப்ளஸில் ட்ரிப்பில் கேமரா மற்றும்  Realme 11 Pro வில் டுயல்  கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. Realme 11 Pro Plus ஆனது 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புரோ மாடலில் அல்ட்ரா வைட் சென்சார் கிடைக்கவில்லை. இதனுடன், 100 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கிடைக்கிறது. Realme 11 Pro Plus உடன் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும், Realme 11 Pro உடன் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கிடைக்கிறது.

Realme 11 Pro சீரிஸின் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த இரண்டிலும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இதனுடன் Realme 11 Pro ப்ளஸில் 100W சார்ஜிங் வசதியுடன் வருகிறது மற்றும் Realme 11 Pro வில் 67 W பாஸ்ட் சார்ஜிங்  வசதியுடன் வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :