108MP கேமரா கொண்ட Realme 11 5G மற்றும் Realme 11x 5G அறிமுகம் இதன் டாப் அம்சம் என்ன ?

Updated on 25-Aug-2023
HIGHLIGHTS

Realme இன்று இந்தியாவில் Realme 11 5G மற்றும் Realme 11x 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ரியல்மி பட்ஸ் ஏர் 5 மற்றும் பட்ஸ் ஏர் 5 ப்ரோவையும் வெளியிட்டது

ரியல்மியின் இ-ஸ்டோர் மற்றும் முக்கிய ரீடைளர் விற்பனை கடைகள் மூலம் விற்கப்படும்.

Realme இன்று இந்தியாவில் Realme 11 5G மற்றும் Realme 11x 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிசுடன் நிறுவனம் ரியல்மி பட்ஸ் ஏர் 5 மற்றும் பட்ஸ் ஏர் 5 ப்ரோவையும் வெளியிட்டது. இதற்கு சற்று முன்பு, Realme 11 Pro 5G மற்றும் Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலை, கிடைக்கும்.

Realme 11 5G: டாப் அம்சம்.

டிஸ்ப்ளே

Realme 11 5G ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் FHD + டிஸ்ப்ளே வழங்குகிறது, இது 1080 x 2400 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz அப்டேட்  வீதத்தை ஆதரிக்கிறது.

பர்போமான்ஸ்

Realme 11 5G ஆனது octa-core MediaTek Dimensity 6100+ சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்  உடன் வருகிறது, ஆனால் பயனர்கள் மைக்ரோ SD கார்டை  மூலம் ச்டோரேஜை மேலும் அதிகரிக்கலாம்  இந்த போன ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் அடிப்படையில் Realme UI லேயரில் இயங்குகிறது.

கேமரா

Realme 11 5Gயின் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 108MP ப்ரைம் சென்சார் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. செல்ஃபி எடுக்க போனின் முன்பக்கத்தில் 16எம்பி கேமரா உள்ளது.

பேட்டரி

Realme 11 5G இல் 5000 mAh பேட்டரி நிறுவப்பட்டுள்ளது, இது 67W SuperVOOC சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வெறும் 29 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

Realme 11x 5G: டாப் அம்சம்

டிஸ்ப்ளே

இப்போது Realme 11x 5G பற்றி பஐகையில் இது 6.72-இன்ச் முழு HD + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz வரை டைனமிக் அப்டேட் வீதத்தை வழங்குகிறது.

பர்போமான்ஸ்

ப்ராசசரைப் பொறுத்தவரை, Realme 11x ஆனது MediaTek Dimensity 6100+ சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 6GB RAM மற்றும் 256GB வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை 2TB வரை அதிகரிக்கலாம். இந்த ஃபோன் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 13 இல் வேலை செய்கிறது.

கேமரா

Realme 11x யில் நீங்கள் இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் வழங்குகிறது இதில் 64MP பிரதான சென்சார் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரை, இந்த மாடலில் 16MP முன் லென்ஸும் கிடைக்கிறது.

பேட்டரி

Realme 11x 5G ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில், செக்யுரிடிக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சாரையும் வழங்குகிறது 

Realme 11 5G, 11x 5G விலை மற்றும் ஆபர்.

Realme வெண்ணிலா Realme 11 5G ஸ்மார்ட்போனை Glory Gold மற்றும் Glory Black வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் 8ஜிபி + 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.18,999 என்றும், 8ஜிபி + 256ஜிபி மாறுபாடு ரூ.19,999 என்றும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

மறுபுறம், Realme 11x 5G நிறுவனம் பர்பில் டவுன் மற்றும் மிட்நைட் பிளாக் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் அடிப்படை மாறுபாடு ரூ.14,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.15,999க்கு வந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட், ரியல்மியின் இ-ஸ்டோர் மற்றும் முக்கிய ரீடைளர் விற்பனை கடைகள் மூலம் விற்கப்படும். மேலும் இதில் SBI மற்றும் HDFC கார்டுகளைப் பயன்படுத்தி Realme 11 5G யில் வாடிக்கையாளர்கள் ரூ.1500 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, இன்று மதியம் 1 மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 29 முதல் விற்பனை செய்யப்படும் 

ப்ரீ ஆர்டர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் 1000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடியையும் பெறலாம். இது தவிர, இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் ஃபிளாஷ் சேலில் மற்றும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் விற்பனையில் SBIமற்றும் HDFC கார்டுகள் மூலம் Realme 11x 5G வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடியையும் நிறுவனம் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :