Realme 10 Pro 5G Coca Cola Edition அற்புதமான டிஸைனுடன் இந்த நாளில் அறிமுகப்படுத்தப்படுகிறது

Realme 10 Pro 5G Coca Cola Edition அற்புதமான டிஸைனுடன் இந்த நாளில் அறிமுகப்படுத்தப்படுகிறது
HIGHLIGHTS

Realme 10 Pro 5G Coca Cola Edition பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே இந்த போனின் படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன

போனின் சிறப்பம்சங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Realme நவம்பர் 2022 இல் Realme 10 Pro 5G அறிமுகப்படுத்தியது, அதன் பிறகு கம்பெனி தனது போன்களில் ஒன்றின் Coca-Cola எடிஷன் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று, கம்பெனி Realme 10 Pro 5G Coca Cola Edition அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 10 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு இந்தியாவில் வெளியிடப்படும். 

ட்விட்டர் யூசர் ஒருவர் Realme 10 Pro 5G Coca Cola Edition டிசைனிங் வெளிப்படுத்தியுள்ளார். படங்கள் டிவைஸின் பின்புற பேனலின் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது, இதில் டூவல் கேமரா செட்டப்பைக் காணலாம். போனியின் பின்புற டிசைனிங் கோகோ கோலா பிராண்டிங்குடன் சிவப்பு மற்றும் கருப்பு கோடுகளைக் கொண்டிருக்கலாம்.

REALME 10 PRO 5G யின் ஸ்பெசிபிகேஷன்  
Realme 10 Pro 5G ஆனது 1080 x 2400 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் 120Hz ரிபெரேஸ் ரெடிற்கான சப்போர்டுடன் 6.7 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆய்வக டெஸ்ட்களின்படி, போனின் டிஸ்ப்ளே பிக் பிரைட்னஸ் 680 நீட்ஸ்களை வெளியிடும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G (6nm) சிப்செட் மூலம் 6GB, 8GB மற்றும் 12GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டிவைஸ் Android 13 அடிப்படையிலான Realme UI 4.0 இல் இயங்குகிறது. 

கைபேசியில் 108MP பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டூவல் பின்புற கேமரா செட்டப்புடன் வருகிறது. போனில் 16MP செல்பி ஷூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. Realme 10 Pro 5G ஆனது 33W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 29 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று Realme கூறுகிறது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo