ஒப்போவின் சூப்பர் அப்டேட் 5 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்

Updated on 23-Dec-2022
HIGHLIGHTS

சாம்சங், ஒன்பிளஸ் நிறுவனங்களின் வரிசையில் ஒப்போ நிறுவனமும் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்க இருக்கிறது

ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு கலர்ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்பட்டாலும், இந்த மாடல்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச் வழங்க ஒப்போ முடிவு செய்து இருக்கிறது.

சாம்சங், ஒன்பிளஸ் நிறுவனங்களின் வரிசையில் ஒப்போ நிறுவனமும் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்க இருக்கிறது. ஒப்போ வெளியிட இருக்கும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு மிக முக்கிய கலர்ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை ஒப்போ நிறுவனம் தனது கலர்ஒஎஸ் மைக்ரோசைட்-இல் வெளியிட்டு இருக்கிறது.

ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு கலர்ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்பட்டாலும், இந்த மாடல்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச் வழங்க ஒப்போ முடிவு செய்து இருக்கிறது. இந்த அப்டேட் வழங்கும் நடைமுறை ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்கு பொருந்தாது. எனினும், எதிர்காலத்தில் வெளியாகும் தேர்வு செய்யப்பட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இந்த அப்டேட் முறை பொருந்தும்.

கடைசியாக ஒப்போ வெளியிட்ட கலர்ஒஎஸ் அப்டேட் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் எளிமை மற்றும் சவுகரியத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. கலர்ஒஎஸ் 13 அப்டேட் மென்மையான, அதிக இயற்கையாக, அழகான அனிமேஷன்கள் நிறைந்து இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய அக்வாமார்ஃபிக் டிசைன், ஸ்மார்ட் AOD, மல்டி-ஸ்கிரீன் கனெக்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

அந்த வகையில், ஒப்போ நிறுவனத்தின் தற்போதைய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒப்போ ஃபைண்ட் X5, ஃபைண்ட் X5 ப்ரோ மற்றும் இதர மாடல்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. இந்த ஆகஸ்ட் மாதம் வெளியான கலர்ஒஎஸ் 13 உலகளவில் ஒப்போ விற்பனை செய்த 33 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது வேகமான மற்றும் மிகப்பெரிய கலர்ஒஎஸ் அப்டேட் ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :