Poco யின் புதிய போனின் அறிமுக தகவல் லீக் ஆனது என்ன போன் எப்படி இருக்கும்

Poco யின் புதிய போனின் அறிமுக தகவல் லீக் ஆனது என்ன போன் எப்படி இருக்கும்

Poco அதன் புதிய Poco X7 5G யில் வேலை செய்கிறது, சில நாட்களுக்கு முன்பு சில வதந்திகள் வருகிறது சமிபத்தில் ரெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது Redmi Note 14 Pro 5G போன்ற டிசைன் கொண்டுள்ளது மேலும் தற்பொழுது இந்த போனின் லீக் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Poco X7 5G லீக் தகவல்

Poco X7 5G யின் க்ளோபல் மாடல் பற்றி நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் பராஸ் குக்லானி வெளிப்படுத்தியுள்ளார் . இந்த லீக் துல்லியமாக இருந்தால், இது கிட்டத்தட்ட Redmi Note 14 Pro 5G யின் காப்பி போல தெரிகிறது.

Poco X7 5G லீக் அம்சம்.

Poco X7 5G யின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.67இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது இதை தவிர இந்த போனில் மீடியாடேக் டிமன்சிட்டி 7300 அல்ட்ரா ப்ரோசெசர் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் வெர்சுவல் ரேம் 24GB வரை அதிகரிக்க முடியும்.

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Poco முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும். லீக் இந்த கூடுதல் பின்புற கேமராக்கள் பற்றிய எந்த குறிப்பிட்ட தகவலையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவை Redmi Note 14 Pro 5G போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AI இமேஜ் விரிவாக்கம், AI ஃபிலிம் மற்றும் AI அழிக்கும் புரோ போன்ற சில AI அடிப்படையிலான கேமரா அம்சங்களையும் Poco சேர்க்கலாம். இந்த அம்சங்கள் போடோக்ரபி மேம்படுத்த அல்லது பிரேமில் பிற பொருட்களை அகற்ற பயன்படுகிறது. இந்த ஃபோனில் பெரிய 5110mAh பேட்டரி இருக்கும், இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். TÜV Rhineland Eye Care சர்டிபிகேசன் , IP68 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட் , மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் போன்ற சில கூடுதல் அம்சங்களையும் ஃபோன் கன்டென்ட் வதந்தி பரவுகிறது.

இதையும் படிங்க:Realme GT 6T அதிரடியாக 6000ருபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo