Poco X6 சீரிஸ் வெளியிட்டு தகவல் வெளியானது, அறிமுகத்திற்க்கு முன்னே சிறப்பம்சம் லீக்

Updated on 09-Jan-2024
HIGHLIGHTS

Poco அதன் முதல் வெளியீட்டு நிகழ்வை 2024 இல் நடத்தப் போகிறது, இதில் Poco X6 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும்

Poco ஸ்மார்ட்போன்கள் தொடர்பான லீக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டீசர்கள் மூலம் நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளன

Poco X சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம் .

Poco அதன் முதல் வெளியீட்டு நிகழ்வை 2024 இல் நடத்தப் போகிறது, இதில் Poco X6 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும். Poco கடந்த சில நாட்களாக, வரவிருக்கும் Poco ஸ்மார்ட்போன்கள் தொடர்பான லீக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டீசர்கள் மூலம் நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிமுகத்திற்கு முன், Poco X சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம் வாங்க..

Poco X6 சீரிஸ் எதிர்ப்பர்க்கபடும் விலை த்தகவல்

Poco ஸ்மார்ட்போனின் விலை சாதரணமாக Redmi ஸ்மார்ட்போன் விட குறைந்த விலையில் இருக்கும் இந்தியாவில் Redmi Note 13 Pro விலை ரூ.25,999 இல் தொடங்குகிறது, எனவே Poco X6 இதை விட மலிவாக இருக்கும். இருப்பினும், ரெட்மி ஸ்மார்ட்போன் உலக சந்தையில் இன்னும் கிடைக்காததால் உலகளாவிய விலைக்கு எந்த மதிப்பீடும் இல்லை. இதேபோல், Poco X6 Pro விலையும் தெரியவில்லை. ஏனெனில் Redmi K70e ஒரு சீனாவின் பிரத்யேக ஸ்மார்ட்போன் ஆகும்.

Poco X6 சீரிஸ் எப்பொழுது அறிமுகமாகும்.

Poco X6 சீரிஸ் சந்தையில் 11 ஜனவரி அறிமுகமாகும், என்று flipkart யில் டீஸ் செய்யப்பட்டுள்ளது.இந்த வெளியீட்டு நிகழ்வு 8 PM GMT+8 (5:30 PM IST) மணிக்குத் தொடங்கும். வரவிருக்கும் வரிசையில் Poco X6 மற்றும் Poco X6 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அடங்கும். சில சந்தைகளில், Poco M6 Pro அதனுடன் இருக்கும்.

போக்கோ X6 சீரிஸ் சிறப்பம்சம்.

பெரும்பாலான Poco ஸ்மார்ட்போன்களைப் போலவே, புதிய Poco X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் ஏற்கனவே உள்ள Redmi ஸ்மார்ட்போன்களின் மாற்றியமைக்கப்பட்ட வெர்சன் ஆகும் Poco X6 ஆனது மறுபெயரிடப்பட்ட Redmi Note 13 Pro ஆகும், அதே சமயம் Poco X6 Pro ஆனது ரீபேட் செய்யப்பட்ட Redmi K70e ஆகும்.

Poco யின் இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் கொண்ட பிளாட் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும், இதன் ரேசளுசன் 2712 x 1220 பிக்சல் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Poco X6 Qualcomm Snapdragon 7s Gen 2 SoC கொண்டிருக்கும். அதேசமயம் X6 Pro MediaTek Dimensity 8300 Ultra chip கொண்டிருக்கும். Poco X6 LPDDR5 ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதேசமயம் X6 Pro LPDDR5x RAM மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜை வழங்கும் Poco X6 Pro ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Xiaomiயின் புதிய HyperOS உடன் வரும். Poco X6 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உடன் வரும்.

கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் இரண்டு பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் OIS-அசிஸ்டன்ட் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இருக்கும். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கும். பேட்டரியைப் பொறுத்தவரை, X6 ஆனது 5,100mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், இது 67W சார்ஜிங்கை ஆதரிக்கும். X6 ப்ரோ ஒரு பெரிய 5,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், இது 90W சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்.

இதையும் படிங்க BSNL யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் 13 மாதங்களுக்கு Broadband சேவை உடன் 1 Month வரையிலான Free இன்டர்நெட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :