108MP கேமராவுடன் Poco ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் விலை மற்றும் அம்சங்களை பாருங்க
Poco X6 Neo இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
Poco X6 மற்றும் Poco X6 Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த போன் வருகிறது
புதிய X6 நியோவின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பார்ப்போம்.
Poco யின் X-சீரிஸ் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் Poco X6 Neo இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, Poco X6 மற்றும் Poco X6 Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த கைபேசி வருகிறது மற்றும் 93.3% ஸ்க்ரீன் -டு-பாடி விகிதத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.69 மிமீ தடிமன் கொண்ட ‘எக்ஸ்ட்ரா தின்’ உடலுடன் வருகிறது. இந்த போன் 20,000ரூபாய் விலை செக்மேண்டில் வரும், இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 12 5G, Redmi Note 13 5G, Lava Curve Blaze 5G மற்றும் பிறவற்றுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. இப்போது புதிய X6 நியோவின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பார்ப்போம்.
Poco X6 Neo விலை மற்றும் விற்பனை தகவல்
X6 Neo போனின் விலை பற்றி பேசினால், அடிப்படை மாடலின் விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.15,999. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தின் மற்றொரு வகையிலும் வருகிறது, இதன் விலை ரூ.17,999 ஆகும். மேம்பட்ட செயல்திறனுக்காக, இந்த மொபைலில் விர்ச்சுவல் ரேம் சப்போர்டை பெறுவீர்கள்.
இதன் விற்பனையை பற்றி பேசினால் இந்த போனின் முதல் விற்பனை மார்ச் 18 பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும், இருப்பினும், இன்று மாலை 7 மணி முதல் இது பிளிப்கார்ட்டில் ஆரம்ப அணுகல் விற்பனைக்கு வரும். முதல் விற்பனையில், ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் மூலம் வாங்கும் போது 1000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். இது மூன்று கலர் விருப்பங்களைக் கொண்டுள்ளது; ஆஸ்ட்ரல் பிளாக், ஹொரைசன் ப்ளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்சு நிறங்களில் வாங்கலாம்.
சிறப்பம்சம்
போக்கொவின் இந்த லேட்டஸ்ட் போனில் 6.67 இன்ச் முழு HD+ 10 பிட் OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது இது 120Hz புதுப்பிப்பு வீதம், 1000 nits உச்ச பிரகாசம் மற்றும் 240Hz தொடு மாதிரி வீதம் ஆகியவற்றை வழங்குகிறது. செயல்திறனுக்காக, இந்த ஸ்மார்ட்போனில் TSMC 6nm செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட MediaTek Dimensity 6080 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட் Mali G57 GPU, LPDDR4x RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் 108MP மெயின் கேமரா 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக இது 16MP முன் எதிர்கொள்ளும் ஷூட்டரையும் கொண்டுள்ளது. இது தவிர, சாதனத்தை இயக்க, 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க:iQoo Z9 5G இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் 5 அம்சங்கள் பாருங்க
இதிலிருக்கும் மற்றஅம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் புளூடூத் பதிப்பு 5.3, WiFi 5, 3.5mm ஆடியோ ஜாக், இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர், IR பிளாஸ்டர் மற்றும் IP54 ஸ்பிளாஸ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் ஆகியவையும் உள்ளன. இது தவிர, மென்பொருளைப் பொறுத்தவரை, X6 நியோ ஆண்ட்ராய்டு 13 யில் முறைமையை அடிப்படையாகக் கொண்ட MIUI 14 இல் இயங்குகிறது, மேலும் நிறுவனம் 2 வருட OS புதுப்பிப்புகளையும் 4 வருட செக்யூரிட்டி கனேக்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile