Poco X6 Neo அறிமுக தேதி வெளியானது எப்போ தெரியுமா ?

Updated on 11-Mar-2024

இரண்டு Poco ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் அறிவிக்கப்பட்டுள்ளது. Poco X6 Neo இந்தியாவில் மார்ச் 13 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். வரவிருக்கும் ஸ்மார்ட்போன் Poco X6 Neo இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Poco X6 மற்றும் Poco X6 Pro சீரிஸில் வரும் Poco X6 Neo இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart யில் பிரத்தியேகமாக விற்பனைக்குக் கிடைக்கும். இந்த போன் 93.3 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடியுடன் பெசல்-லெஸ் டிசைனுடன் வரும். போனின் திக்னஸ் 7.69 mm இருக்கும்.

எதிர்ப்பர்க்கபடும் விலை

Poco X6 Neo ஸ்மார்ட்போன் ரூ.16,000 முதல் ரூ.17,000 விலையில் வெளியிடப்படும். போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும். இந்த போன் 8ஜிபி ரேம் உடன் வரும்.

Poco X6 Neo சிறப்பம்சம்

Poco X6 Neo சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.6 இன்ச் FHD+ OLED ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் உடன் வழங்கபடுகிறது மேலும் இந்த போனில் MediaTek Dimension 6080 சிப்செட் ஆதரவு போனில் வழங்கப்படும். இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின்னில் இயங்கும். இந்த இரண்டு கலர் விருப்பங்களில் வரும்.

நாம் கேமராவைப் பற்றி பேசினால், இந்த போனில் 108MP கேமரா சென்சாருடன் வரும். மேலும், 2எம்பி டெப்த் கேமரா சென்சார் வழங்கப்படும். இதன் வீடியோ தரம் 1080 பிக்சல்கள், இது 60fps ஆதரவுடன் இருக்கும். இந்த போன் 16MP செல்ஃபி கேமரா சென்சாருடன் வரும். முன் கேமராவின் வீடியோ தரம் 1080 பிக்சல்கள், இது 30 fps சப்போர்டுடன் வரும்.

#Poco-X6-Neo.png

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் இணைப்பிற்கு, வைஃபை 5, புளூடூத் 5.3 சப்போர்ட் போனில் வழங்கப்படும். போனில் ஹெட்போன் ஜாக் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்படும். இந்த போன் IP54 ரேட்டிங் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உடன் வரும்.

இதையும் படிங்க:Flipkart பிரமண்டமான விற்பனை ஆரம்பமாக இருக்கிறது iphone பல போன்களை குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :