Poco யின் இரண்டு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் விலை அம்சங்கள் பாருங்க

Updated on 17-Dec-2024

POCO செவ்வாய்கிழமை அன்று இந்தியாவில் அதன் இரண்டு POCO M7 Pro 5G மற்றும் POCO C75 5G போனை அறிமுகம் செய்துள்ளது , மேலும் இந்த இரு போன்களும் குறைந்த விலை ரேஞ்சில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனின் விலை மற்றும் இதிலிருக்கும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

POCO M7 Pro 5G மற்றும் POCO C75 5G விலை தகவல்

Poco M7 Pro வெளியீட்டு விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது. இந்த விலை அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதன் இரண்டாவது வேரியண்டில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது. இதன் விலை ரூ.15,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த போன் டிசம்பர் 20 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விற்பனை பிளிப்கார்ட் மூலம் நடைபெறும்.

Poco

Poco C75 5G இன் விலையைப் பற்றி பேசினால், அதன் விலை ரூ.7,999. இது பிளிப்கார்ட்டில் இருந்து விற்பனை செய்யப்படும். இந்த போன் டிசம்பர் 19ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

Poco M7 Pro 5G சிறப்பம்சம்

Poco M7 Pro 5G அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120hz பேணல் மற்றும் இதில் 2,100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது மற்றும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது

இதை தவிர இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek’s Dimensity 7025 Ultra சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இது 8GB யின் ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இது Android 14 அடிபடையின் கீழ் HyperOS யில் இயங்குகிறது இதை தவிர இந்த போனில் 2 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 4 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் 50MP Sony LYT-600 மெயின் கேமரா உடன் 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது செல்பிக்கு இதில் 20 MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

Poco C75 5G சிறப்பம்சம்.

Poco C75 5G பற்றி பேசினால் இந்த போனில் 6.88-இன்ச் ஸ்க்ரீன் உடன் 1640×720 பிக்சல் ரேசளுசன் மற்றும் இதில் 600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் புதிய Snapdragon 4s Gen 2 ப்ரோசெசர் உடன் இதில் 4GB யின் ரேம் மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் Android 14 அடிபடையின் கீழ் HyperOS.யில் இயங்குகிறது மேலும் Poco C75 2 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி பெட்சாஸ் வழங்கப்படுகிறது

இதை தவிர கேமரா பற்றி பேசுகையில் 50 MP மற்றும் 1.8 MP QVGA இரண்டாம் நிலை கேமரா உட்பட இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. செல்ஃபிக்களுக்கு, ஸ்மார்ட்போன் 5 எம்பி முன் கேமராவைப் வழங்குகிறது . இதனுடன் இந்த போனில் 5160mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க: Lava யின் புதிய போன் டுயல் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் விலை மற்றும் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :