Poco M6 Pro 5G யின் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அறிமுகம், 2 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கலாம்
Poco ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
இப்போது 8 ஜிபி + 256 ஜிபி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
POCO M6 Pro யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் யின் விலை 14,999 ரூபாயாக இருக்கிறது
Poco ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 5ஜி ப்ரோசெசச்ர் குறைந்த விலையில் கொண்டு வந்துள்ளது, இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ. 10,999, பின்னர் நிறுவனம் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டை அறிமுகப்படுத்தியது, இப்போது 8 ஜிபி + 256 ஜிபி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Poco M6 Pro 5G பற்றி தெளிவாக கூறப்படுகிறது.
POCO M6 Pro 8GB + 256GB யின் விலை மற்றும் விற்பனை
POCO M6 Pro யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் யின் விலை 14,999 ரூபாயாக இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் இன்று அதாவது நவம்பர் 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். சிறப்பு வெளியீட்டு ப்ரோமோசன் கீழ், Poco வாடிக்கையாளர்கள் HDFC மற்றும் ICICI பேங்க் கார்டுகளின் கட்டணங்களில் 2000 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
M6 Pro யின் சிறப்பம்சம்
POCO M6 Pro யில் 6.79 இன்ச் LCD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது முழு HD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ரஸ் ரேட் 240Hz டச் ஸ்க்ரீன் மற்றும் 550 nits வரை ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 4 Gen 2 SoC பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் வேலை செய்கிறது.
இதையும் படிங்க: Google Drive யிலிருந்து தானாகவே காணமல் போகும் டேட்டா
கேமரா பற்றி பேசுகையில் இந்த போனின் பின்புறம் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
POCO M6 Pro 5G யின் கனெக்டிவிட்டி விருப்பங்களில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் Wi-Fi 6, புளூடூத் 5.1 கனெக்டிவிட்டி பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் அகச்சிவப்பு ரிமோட் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். இந்த ஃபோனின் எடை 199 கிராம் மற்றும் இது IP53 ரேட்டிங் வாட்டர் மற்றும் டஸ்டுக்கு பாதுகாக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile