Poco M6 Pro 4G விரைவில் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது., இந்த போனில் Qualcomm Snapdragon 4 Gen 2 SoC மற்றும் 5,000mAh பேட்டரியுடன் மே 2023 யில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Poco M6 Pro 5G மாடலுடன் இந்த ஃபோன் இணையும். Poco M6 Pro 4G யின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் மற்றும் பிற தகவல்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. நிறுவனம் தற்போது போனின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இது Poco X6 சீரிசுடன் வெளியிடப்பட உள்ளது. Poco M6 Pro 4G பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
Poco M6 Pro 4Gக்கு மைக்ரோ சைட் மூலம் தெரிய வந்துள்ளது, இந்த Poco X6 சீரிஸ் உடன் ஜனவரி 11 உலகலாவிய அறிமுகம் செய்யும். Poco போது Poco M6 Pro 4G ஆனது Amazon UAE இல் 91Mobiles மூலம் முதன்முதலில் காணப்பட்டது. அதன் 12GB + 512GB வேரியன்ட் AED 899 (தோராயமாக ரூ. 20,400) லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது முன்னதாக ஒரு லீக்கில் இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் ஊதா கலர் விருப்பங்களில் வெளியிடப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
லீக் அமேசான் லிஸ்டில் Poco M6 Pro 4G ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் இருக்கிறது இதில் 6.67-இன்ச் முழு HD+ poOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது, புதிய போனில் MediaTek Helio G99 சிப்செட் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Poco M6 Pro 4G ஆனது மூன்று பின்புற கேமரா மாட்யுல் கொண்டிருக்கும், இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்போர்த்டுடன் 64 மெகாபிக்சல் AI ப்ரைமரி கேமரா இருக்கும். ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கலாம். போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி இருக்கலாம்.
இதையும் படிங்க: விரைவில் ரயில்வே கொண்டு வருகிறது Super App ஒரே ஆப் யில் நடக்கும் அனைத்து வேலையும்
Poco M6 Pro 5G யின் 4GB + 128GB வேரியண்டின் விலை ரூ.10,999, 6GB + 128GB விலை ரூ.11,999 மற்றும் 8GB + 256GB வேரியண்டின் விலை ரூ.13,499. இந்தியாவில் Forest Green மற்றும் Power Black கலரில் கிடைக்கிறது.