digit zero1 awards

Poco X6 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் தகவலை தெரிஞ்சிகோங்க

Poco X6 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் தகவலை தெரிஞ்சிகோங்க
HIGHLIGHTS

Poco இந்தியாவில் X6 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் Poco X6 மற்றும் X6 Pro ஆகியவை அடங்கும்

Poco X6 ஆனது 8 GB + 256 GB மற்றும் 12 GB + 256 GB ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Poco இந்தியாவில் X6 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Poco X6 மற்றும் X6 Pro ஆகியவை அடங்கும். Poco X6 அதன் ப்ரோசெசராக் Snapdragon 7s Gen 2 மற்றும் X6 Pro ஆனது MediaTek Dimensity 8300-Ultra SoC ஐக் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1.5K ரேசளுசன் கொண்ட AMOLED ஸ்க்ரீன்களை கொண்டுள்ளன.

Poco X6 மற்றும் X6 Pro விலை தகவல்.

Poco X6 ஆனது 8 GB + 256 GB மற்றும் 12 GB + 256 GB ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவற்றின் விலை முறையே ரூ.18,999 மற்றும் ரூ.21,999. ஸ்னோஸ்டார்ம் ஒயிட் மற்றும் மிரர் பிளாக் நிறங்களில் இதை வாங்கலாம். எக்ஸ்6 ப்ரோவின் 8 ஜிபி + 256 ஜிபி வகையின் விலை ரூ.24,999 மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி ரூ.26,999. இது போகோ மஞ்சள், ரேசிங் கிரே மற்றும் ஸ்பெக்டர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் ஜனவரி 16 முதல் விற்பனை செய்யப்படும். ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் இஎம்ஐ ட்ரேன்செக்சன் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.

X6 மற்றும் X6 Pro சிறப்பம்சம்.

இவை இரண்டும் டூயல் சிம் (நானோ) ஸ்மார்ட்போன்கள். இவை ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகின்றன. இவற்றுக்கு, 3 OS மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

இது 6.67-இன்ச் 1.5K (1,220×2,712 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 120 ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,800 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Poco X6 மற்றும் X6 Pro ஆகியவை 64-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Poco X6 5,100 mAh பேட்டரியையும், X6 Pro 5,000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. கடந்த மாதம் Poco C65 ஐ அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன்களின் கனெக்டிவிட்டி விருப்பங்களில் 4G LTE, 5G, ப்ளூடூத், NFC, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: Jio யின் புதிய இண்டர்நேசனல் ரோமிங் பேக்கை கொண்டு வந்துள்ளது

கடந்த மாதம் Poco C65 ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் Redmi 13C போன்றே உள்ளது. இதன் ப்ரோசெசரக MediaTek Helio G85 உள்ளது. இதற்கு இரண்டு வருட ஆண்ட்ராய்டு OS மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 8,499, 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 9,499 மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,999 ஆகும். இது Pastel Blue மற்றும் Matte Black கலரில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo