Poco X6 5G யின் புதிய வேரியண்டில் அதிரடியாக ரூ,3000 தள்ளுபடி

Poco X6 5G யின் புதிய வேரியண்டில் அதிரடியாக ரூ,3000 தள்ளுபடி
HIGHLIGHTS

Poco அதன் லேட்டஸ்ட் Poco X6 5G புதிய வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

Poco 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் X6 5G யின் புதிய வேரியண்டை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் புதிய வேரியண்டின் விலை ரூ.23,999. வாங்கலாம்

Poco அதன் லேட்டஸ்ட் Poco X6 5G புதிய வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம். Poco 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் X6 5G யின் புதிய வேரியண்டை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு மாதத்திற்கு முன்பு 8 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ப்ரோசெசராக Snapdragon 7s Gen 2 SoC உள்ளது.

Poco X6 5G 12GB+256GB புதிய வேரியண்டின் விற்பனை

இதன் புதிய வேரியண்டின் விலை ரூ.23,999. ஸ்னோஸ்டார்ம் ஒயிட் மற்றும் மிரர் பிளாக் கலர்களில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இதை வாங்கலாம். HDFC, Axis, ICICI மற்றும் SBI வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலோ அல்லது EMI மூலம் வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். இதன் 8 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி வகைகளின் விலை முறையே ரூ 21,999 மற்றும் ரூ 24,999 ஆகும்.

X6 5G சிறப்பம்சம்

Poco X6 5G சிறப்பம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.67-இன்ச் 1.5K (1,220×2,712 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,800 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இதையும் படிங்க: Latest OTT Release: பிப்ரவரி 2024 வெளியான இந்த படங்களை பார்த்து மகிழலாம்

இது டூயல் சிம் (நானோ) ஸ்மார்ட்போன் ஆகும். Poco X6 5G ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. இதற்காக, 3 OS அப்டேட் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் கனெக்டிவிட்டி ஒப்சனிர்க்கு இதில் கிடைக்கும் 4G LTE, 5G, புளூடூத், NFC, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை இதில் அடங்கும். Poco X6 5,100 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனுடன் இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo