digit zero1 awards

POCO F6 பல சூப்பர் அம்சங்களுடன் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

POCO F6 பல சூப்பர் அம்சங்களுடன் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

POCO இந்திய சந்தையில் POCO F6 அறிமுகம் செய்தது

புதிய POCO ஸ்மார்ட்போனில் 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் Snapdragon 8s Gen 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது

Poco F6 யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தகவலை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

POCO இந்திய சந்தையில் POCO F6 அறிமுகம் செய்தது, புதிய POCO ஸ்மார்ட்போனில் 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் Snapdragon 8s Gen 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது. Poco F6 யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தகவலை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

POCO F6 யின் விலை மற்றும் விற்பனை

POCO F6 யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 29,999ரூபாயாக இருக்கிறது, அதுவே 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 31,999ரூபாய் மற்றும் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 33,999 ரூபாயாக இருக்கிறது, POCO F6 இன் முதல் விற்பனை மே 29 அன்று மதியம் 12 மணிக்கு Flipkart வழியாக தொடங்கும். வங்கி சலுகையில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் மற்றும் பிளாக் என இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

POCO F6 டாப் அம்சங்கள்

POCO F6 டிஸ்ப்ளே

POCO F6 ஆனது 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவை 120Hz, 240Hz டச் சாம்லிங் ரேட் மற்றும் 2400 nits பீக் ப்ரைட்னஸ் உடன் ப்ரைட்னாஸ் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது

ப்ரோசெசர்

இந்த போனில் Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறதுஇந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Xiaomi HyperOS ஐ இயக்குகிறது. POCO மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்களையும் உறுதியளிக்கிறது.

கேமரா

கேமரா பற்றி பேசினால், இது POCO F6 யில் POCO F6 யில் OIS சப்போர்டுடன் 50 மேகபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி கேமரா 8 மேகபிக்சல் சோனி IMX355 அல்ட்ராவைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் POCO Iceloop கூலிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி பற்றி பேசினால், இந்த POCO ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. நிறுவனம் பாக்சுடன் 90W சார்ஜரை வழங்குகிறது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி விருப்பங்களில் NFC, ப்ளூடூத் 5.4, IP64 ரேட்டிங் டால்பி அட்மாஸ் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: OnePlus Nord 4 அறிமுக முன்பே தகவல் அம்பலமாகியது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo