Poco இந்தியாவில் அதன் POCO F6 ஸ்மார்ட்போனை மே 23 அறிமுகம் செய்தது தற்பொழுது இதன் விற்பனை மே 29 தேதியான இன்று Flipkart மற்றும் அதிகரபூரவ வெப்சைட்டில் விற்பனைக்கு வருகிறது, இந்த போனின் முதல் விற்பனை மதியம் 12 மணி முதல் லைவில் இருக்கும். போக்கொவின் இந்த போன் மூன்று வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்கொ F6 யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 29,999ரூபாயாக இருக்கிறது, அதுவே 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 31,999ரூபாய் மற்றும் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 33,999 ரூபாயாக இருக்கிறது, இந்த போனின் விற்பனை இன்று ப்ளிப்கர்டில் அதாவது மே 29 அன்று பகல் 12 மணி முதல் ஆரம்பமாகிறது இந்த போனின் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் ரூ,2,000 எக்ச்ச்சஞ் ஆபர் உடன் இதில் கஸ்டமர்களுக்கு நன்மை 1+1 வருட வாரண்டி முதல் விற்பனையின் கீழ் வழங்கப்படுகிறது
ICICI கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயனர்களுக்கு EMI ட்ரேன்செக்சன் கீழ் ரூ,2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
POCO F6 ஆனது 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவை 120Hz, 240Hz டச் சாம்லிங் ரேட் மற்றும் 2400 nits பீக் ப்ரைட்னஸ் உடன் ப்ரைட்னாஸ் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது
இந்த போனில் Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறதுஇந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Xiaomi HyperOS ஐ இயக்குகிறது. போக்கொ மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்களையும் உறுதியளிக்கிறது.
கேமரா பற்றி பேசினால், இது போக்கொ F6 யில் POCO F6 யில் OIS சப்போர்டுடன் 50 மேகபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி கேமரா 8 மேகபிக்சல் சோனி IMX355 அல்ட்ராவைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் POCO Iceloop கூலிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரி பற்றி பேசினால், இந்த போக்கொ ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. நிறுவனம் பாக்சுடன் 90W சார்ஜரை வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு இதில் NFC, ப்ளூடூத் 5.4, IP64 ரேட்டிங் டால்பி அட்மாஸ் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க Lava Yuva 5G இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் முழுசா பாருங்க