அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது Poco F5 5G ஸ்மார்ட்போன்.

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது Poco F5 5G ஸ்மார்ட்போன்.
HIGHLIGHTS

Poco இந்தியாவில் அதன் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் Poco F5 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன் பிராண்ட் Poco இந்தியாவில் அதன் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் Poco F5 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் கேமிங் போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனுடன் நிறுவனம் Poco F5 Proவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Poco F5 5G ஆனது Snapdragon 7+ Gen 2 ப்ரோசெசர் மற்றும் 12 GB RAM உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன் 67W டர்போ சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Poco F5 5G யின் விலை 

Poco F5 5G ஆனது Charcoal Black, Electric Blue மற்றும் Snow Storm White வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி இரண்டு சேமிப்பக விருப்பங்களில் வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.29,999 மற்றும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.33,999. இந்த போனை அறிமுக சலுகையாக ரூ.26,999 மற்றும் ரூ.30,999க்கு வாங்கலாம். இந்த போன் மே 16 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு கிடைக்கும்.

Poco F5 5G சிறப்பம்சம்

Poco F5 5G ஆனது டூயல் சிம் மற்றும் MIUI 14 அடிப்படையிலான Android 13 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபோனில் 6.67-இன்ச் முழு HD+ (1,080×2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்லிங் ரேட், 93.5 சதவீதம் ஸ்க்ரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. டிஸ்பிளே DCI-P3 வண்ண ரேன்ஜ் , டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் 100 சதவீத கவரேஜுடன் வருகிறது. ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இன் ப்ரொடெக்சன் உள்ளது.

புதிய Poco ஃபோன் Qualcomm இன் புதிய Snapdragon 7+ Gen 2 ப்ரோசெசர் மூலம் 8GB LPDDR5X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. 7ஜிபி விர்ச்சுவல் ரேம் மூலம் ரேமை 19ஜிபி வரை விரிவாக்க முடியும். Poco F5 5G 256GB UFS 3.1 ஸ்டோரேஜை பெறுகிறது. இது IP53-ரேட்டிங்கை ஸ்பிளாஸ்-எதிர்ப்பு கட்டமைப்பையும் கொண்டுள்ளது. வெப்ப மேலாண்மைக்காக, Poco F5 5G ஆனது 3725mm சதுர ஹீட்  டிசிபிஎசான் பகுதி மற்றும் 14 லேயர் கிராஃபைட் பேப்பருடன் வெப்பர் ரூம்  கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

.போனின் கேமரா செட்டிங்கை பற்றி பேசுகையில், இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. இரண்டாம் நிலை கேமரா 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

Poco F5 5G ஆனது 67W டர்போ சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்வதைப் பொறுத்தவரை, 45 நிமிடங்களில் போனை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. போனில் கனெக்டிவிட்டி விருப்பங்களைப் பற்றி பேசுகையில், இதில் 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.3 மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். Poco F5 5G ஆனது அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது Dolby Atmos ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo