Xiaomi இந்தியாவில் அதன் புதிய சப் ப்ராண்ட் கடந்த வாரம் அறிமுகம் செய்தது, இந்த ப்ராண்டின் கீழ் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் POCO F1 அறிமுகப்படுத்தியது, இருப்பினும் இது புதிய ப்ரண்டாக இருந்தாலும் இது Xiaomi யின் பரம்பரை தான்.
இந்த போகோ F1 இன்று 12 மணிக்கு இதன் பிளாஷ் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் Mi.com. ஆரம்பம் ஆகிறது. இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 845 கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகையில் அறிமுகமானது அதாவது 6GB ரேம் +64GB ஸ்டோரேஜ், 6GB ரேம் +128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GBரேம் +256GB ஸ்டோரேஜ் அறிமுகமானது இதனுடன் இதன் விலை Rs 20,999 லிருந்து ஆரம்பிக்கிறது
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI கொண்டுள்ளது. மேலும் போகோ F1 மாடலில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் போட்டோக்கள் எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 20 எம்பி செல்ஃபி கேமரா மற்றும், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஆர். ஃபேஸ் அனஅலாக் வசதி கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடல் இருள் நிறைந்த இடங்களிலும் 0.4 நொடிகளில் அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
போகோ F 1 சிறப்பம்சங்கள்:
– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
போகோ F1 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் புளு மற்றும் ரோஸோ ரெட் போன்ற நிறங்களிலும், ஆர்மர்டு எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இவற்றுடன் சாஃப்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.
Poco F1 பிளாஷ் சேல் , டிஸ்கவுண்ட் ,மற்றும் ஆபர்
இந்த Poco F1 6GB+64GB ஆரம்ப விலை Rs 20,999ரூபாயாக இருக்கிறது. அதுவே அதன் 6GB RAM+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 23,999 ரூபாய்க்கு கிடைக்கிறது கடைசியாக 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 29,999.ரூபாயாக இருக்கிறது இதனுடன் இந்த போனின் லைவ் சேல் Mi.com மற்றும் பிளிப்கார்ட்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இதனுடன் HDFC க்ரெடிட் அல்லது டெபிட் காட்டிலிருந்து வாங்குவோர்களுக்கு 1000 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும் இதனுடன் HDFC கார்ட் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம், இதனுடன் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ பயனராக இருந்தால் Rs 8,000 வரையிலான பெனிபிட் கிடைக்கும் இதனுடன் உங்களுக்கு இதில் 6TB இலவச 4G டேட்டா கிடைக்கும்.
Mi.com லிருந்து வாங்குவோர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஹுங்கம்மா ம்யூசிக் யின் இலவச சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கும், இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை Mi யின் அதிகாரபூர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கினால் கூடுதலாக எக்சிடண்ட் லிக்யுட் டேமேஜ் ப்ரொடெக்சன் Rs 1,099 மதிப்பிலான Mi மூலம் பாதுகாப்பு கிடைக்கும்.