Xiaomi இன்று இந்தியாவில் அதன் புதிய சப் ப்ராண்ட் அறிமுகம் செய்துள்ளது, இந்த ப்ராண்டின் கீழ் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் POCO F1 அறிமுகப்படுத்தியது, இருப்பினும் இது புதிய ப்ரண்டாக இருந்தாலும் இது Xiaomi யின் பரம்பரை தான்.
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI மற்றும் போகோ லான்ச்சர் கொண்டுள்ளது. மேலும் போகோ F1 மாடலில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 20 எம்பி செல்ஃபி கேமரா மற்றும், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஆர். ஃபேஸ் அனஅலாக் வசதி கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடல் இருள் நிறைந்த இடங்களிலும் 0.4 நொடிகளில் அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகோ F 1 சிறப்பம்சங்கள்:
– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
போகோ F1 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் புளு மற்றும் ரோஸோ ரெட் போன்ற நிறங்களிலும், ஆர்மர்டு எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இவற்றுடன் சாஃப்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் போகோ F 1 விலை: மற்றும் ஆபர்
போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.20,999
போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.23,999
போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.28,999
போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் ரூ.29,999
இந்தியாவில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com வலைத்தளங்களில் ஆகஸ்டு 29-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. முதல் விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ.1000 தள்ளுபடியும், ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.8000 உடனடி சலுகைகள் மற்றும் 6000 ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது