POCO C65 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து 18th Dec,ஆன இன்று இந்த போன் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த போனின் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இதில் 4GB+128GB RAM, 6GB+128GB RAM, மற்றும் 8GB+256GB RAM வேரியன்ட்கள் அடங்கும்.
இந்த போனின் 4GB+128GB வேரியண்டின் விலை ரூ,8499 அதுவே 6GB+128GB வேரியன்ட் விலை ரூ,9499 மற்றும் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 10,999ரூபாயாகும் நீங்கள் இந்த போனை ICICI மற்றும் HDFC பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 1000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும் மற்றும் EMI ட்ரென்செக்சன் வசதியும் வழங்கப்படுகிறது மேலும் கூடுதலாக 2500 கேஷ்பேக்கூப்பன் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இது 6.74-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) LCD ஸ்க்ரீன் உடன் 90 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ்ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் MediaTek Helio G85 SoC உள்ளது. இதில் டுயல் சிம் (நானோ) கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 யில் வேலை செய்கிறது.
இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் இதன் மூன்று பின்புற கேமரா செட்டிங் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் 5,000 mAh பேட்டரியை USB Type-C போர்ட் வழியாக 18 W யில் சார்ஜ் செய்ய முடியும்.
இதையும் படிங்க: Tecno Spark 20 Pro ஸ்மார்ட்போன்108MP கேமராவுடன் அறிமுகம்
POCO C65 ஆனது 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் ஆகியவற்றின் கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டுள்ளது.