போக்கோ அதன் POCO C65 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்நிறுவனத்தின் சி சீரிஸில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய போன் இந்த பட்ஜெட் போன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 6.74-இன்ச் HD+ ஸ்க்ரீன் உள்ளது, இது 90Hz அப்டேட் வீதத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில், இருக்கும் நாட்ச்சில் 8எம்பி செல்ஃபி கேமரா இருக்கும். ஹீலியோ ஜி85 செயலி இந்த போனில் உள்ளது. இதை போக்கோ C55 யில் பார்த்தோம். இந்த போக்கோ போனில் 8ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் அதிகரிக்கலாம் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் .
போக்கோ C65 ஸ்மார்ட்போனை கருப்பு, நீலம் மற்றும் ஊதா நிறங்களில் வாங்கலாம். இந்த போனின் விலை சுமார் USD 129 அதாவது ரூ.10725. இந்த விலை போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மாடலின் விலையாகும். இருப்பினும், நீங்கள் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை வாங்கவும் விரும்பினால், அதற்கு நீங்கள் சுமார் 149 USD ஆகும், இது இந்திய ரூபாயில் சுமார் ரூ.12390 ஆகும், இருப்பினும் Early Bird Price விலை சுமார் 109 மற்றும் 129 டாலர் இருக்கும்.
போக்கோ C65 ஸ்மார்ட்போனில் 6.74-இன்ச் 1600×720 பிக்சல்கள் HD+ டிஸ்ப்ளே உள்ளது, இது 90Hz அப்டேட் விகிதத்தில் இயங்குகிறது. இதுமட்டுமின்றி இந்த போனில் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் உள்ளது.
போனின் ப்ரோசெசரே பற்றி பேசினால், ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ரோசெசர் இருக்கிறது இது 12nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் தவிர, போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. ஃபோனில் ச்டோரேஜை 1TB வரை அதிகரிக்கலாம். இது தவிர, இந்த போனில் டூயல் சிம் ஆதரவு இந்த போக்கோ ஃபோன் ஆண்ட்ராய்டு 13 ஐ ஆதரிக்கிறது, இது MIUI 14 யில் வருகிறது.
இதையும் படிங்க: Jio அறிமுகம் செய்த அசத்தலான சாதனம் இனி உங்க கார் தொலைய வாய்ப்பே இல்லை
கேமரா பற்றி பேசினால், 8எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. போனில் 50எம்பி பின்புற கேமரா உள்ளது மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி 8எம்பி செல்பீ கேமராவும் போனில் உள்ளது.
மவுண்டேட் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. போனில் 3.5mm ஆடியோ ஜாக் கிடைக்கிறது, இது FM ரேடியோவிற்கும் சப்போர்டை கொண்டுள்ளது. போனில் வாடிக்கையாளர்களுக்கு 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.