POCO C65 அறிமுக தேதி வெளியானது அது எப்போ தெரியுமா?

Updated on 03-Nov-2023
HIGHLIGHTS

POCO தனது புதிய ஸ்மார்ட்போனை C சீரிஸில் அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக உள்ளது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட் படி, இந்த போன் நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இப்போது இந்த போன் எந்த விலையில் வரும் என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

போக்கோ தனது புதிய ஸ்மார்ட்போனை C சீரிஸில் அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக உள்ளது. POCO C55 யின் குடுபத்தில் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட் படி, இந்த போன் நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போன் இன்னும் 2 நாட்களில் அறிமுகப்படுத்தப்படும். இப்போது இந்த போன் எந்த விலையில் வரும் என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் ட்விட்டர் படி பார்த்தால், போக்கோ C65 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் $109 ஆக இருக்கலாம், இது தவிர, போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் $129 ஆக இருக்கும். மேலும் இந்த போனில் என்ன சிறப்பம்சம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

POCO C65 யில் எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Helio G85 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது போக்கோ C55 யில் காணப்பட்ட அதே செயலி இதுவாகும். இந்த போனில் 50MP ப்ரைம் கேமராவைக் காணலாம், இது தவிர இந்த போனில் மற்ற இரண்டு கேமராக்களும் இருக்கலாம்.

ஃபோனில் அப்டேட் செய்யப்பட்ட ஐலேன்ட் வடிவமைப்பைக் காணலாம், இது போனுக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்கப் போகிறது.

இதை தவிர இந்த போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இதன் பொருள் போக்கோ C65 யில் பேட்டரி எந்த திறனைக் கொண்டிருக்கப் போகிறது, அல்லது அது என்ன டிச்ப்லேவை கொண்டிருக்கப் போகிறது என்பது பற்றிய எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் இதன் டிசைன் பார்த்தால் Redmi 13C நன்றாகப் பொருந்துவதாகத் தெரிகிறது., லீக்கின் படி பார்த்தால் இதில் போக்கோ C65 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் IPS ஸ்க்ரீன் இடம்பெறலாம்.

இதையும் படிங்க: BSNL இந்த தீபாவளிக்கு செம்ம Extra நன்மைகள் வழங்கப்படுகிறது

இதை தவிர இந்த போனில் 5000mAh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது, இருப்பினும், இந்த சிறப்பம்சங்கள் நிறுவனத்தால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :