பிரீமியம் தோற்றத்தைக் கொண்ட குறைந்த விலை போனை நீங்கள் தேடுகிறீர்களானால், POCO அதன் புதிய போன் POCO C51 ஐ உங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி36 செயலி கொண்ட நிறுவனத்தின் சி-சீரிஸின் புதிய போன் இதுவாகும். POCO C51 ஒரு பெரிய 6.52-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 7 ஜிபி வரை ரேம் கிடைக்கிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
POCO C51யின் விலையை பற்றி பேசினால்,இது 8,499 ரூபாயாக இருக்கிறது ஆனால் நீங்கள் இதை அறிமுக சலுகையின் கீழ் 7,799 ரூபாயில் வாங்கலாம்.POCO C51 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜில் அதே வேரியண்ட்டின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. POCO C51 ஏப்ரல் 10 முதல் Flipkart இலிருந்து விற்கப்படும்.
POCO C51 யில் 6.5 இன்ச் HD ப்ளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது இதை தவிர இதில் மீடியாடெக் ஹீலியோ G36 ப்ரோசெசர் கொண்டுள்ளது இது ஆண்ட்ராய்டு 13 எடிஷனில் வேலை செய்கிறது
இந்த போனில் 4GB ரேமுடன் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இது 2.2GHz க்ளோக் ஸ்பீட் கொண்டுள்ளது.
POCO C51 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் முதன்மை லென்ஸ் 8 மெகாபிக்சல்கள் ஆகும். மற்ற லென்ஸ் VGA ஆகும். முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா மூலம், நீங்கள் 1080p மற்றும் 30fps வீடியோக்களை ரெக்கார்ட் செய்யலாம். கேமராவுடன் பல முறைகளும் கிடைக்கும்.
POCO C51 ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இதன் மூலம் 10W சார்ஜிங் கிடைக்கிறது. கனெக்டிவிட்டிக்காக , போனில் ஹெட்ஃபோன் ஜாக், 4ஜி, புளூடூத் மற்றும் சார்ஜிங் போர்ட் உள்ளது. ராயல் ப்ளூ மற்றும் பவர் பிளாக் வண்ணங்களில் இந்த போன் வாங்கலாம். இது ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் போன். போனின் பின் பேனலில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.