மிக குறைந்த விலை ஸ்மார்ட்போனான POCO C50 முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.

Updated on 10-Jan-2023
HIGHLIGHTS

Poco C50 இன்று முதல் முறையாக பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது

Poco C50 யின் முதல் விற்பனை ஜனவரி 10 அன்று மதியம் 12 மணிக்கு Flipkart யில் நடைபெறும்

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் நல்ல தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

3 கேமராக்கள்  5000mAh பேட்டரி 32ஜிபி ஸ்டோரேஜ்கொண்ட Poco C50 இன்று முதல் முறையாக பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.மேலும் இந்த விற்பனையின் பொது மிக சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது  Poco சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன் Poco C50 யின் முதல் விற்பனை ஜனவரி 10 அன்று மதியம் 12 மணிக்கு Flipkart யில் நடைபெறும். இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் நல்ல தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

Poco C50  யின் விலை மற்றும் ஆபர்.

Poco C50 இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது – 2GB RAM + 32GB மற்றும் 3GB RAM + 32GB. இதன் அடிப்படை வேரியண்ட்டின் விலை ரூ.6,499 ஆகும். அதே நேரத்தில், அதன் டாப் வேரியண்ட் ரூ.7,299க்கு கிடைக்கும். முதல் விற்பனையில் போனை வாங்கினால் ரூ.1,500 வரை தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் ரூ.226 EMI-க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம்.

Poco C50 யின் சிறப்பம்சம்..

Poco C50 பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் அகலமான டிஸ்ப்ளே உள்ளது. ஃபோனின் டிஸ்ப்ளே 60Hz புதுப்பிப்பு வீதத்தையும் 120Hz டச் ஸ்க்ரீன் வீதத்தையும் ஆதரிக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு போனின் டிஸ்ப்ளேவில் கொடுக்கப்பட்டுள்ளது.

போகோவின் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஏ22 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உள் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை அதிகரிக்கலாம்.

Poco C50 இன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு கிடைக்கிறது. போனின் முதன்மை கேமரா 8 எம்.பி. இதனுடன் மற்றொரு கேமராவும் கிடைக்கும். இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 5எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

Poco C50 ஆனது 5,000mAh பேட்டரியைப் பெறுகிறது. மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் அம்சம் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் போனில் துணைபுரிகிறது. இந்த Poco ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 Go அடிப்படையிலான MIUI இல் வேலை செய்கிறது. பாதுகாப்பிற்காக, பின்புறத்தில் பொருத்தப்பட்ட பிஸிக்கல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :