Motorola Moto G Stylus 2023ஐ,அடுத்தபடியாக, பல்வேறு சந்தைகளுக்கான பட்ஜெட் ரேஞ்ஜாக அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, G Stylus 2023 FCC சான்றிதழ் மற்றும் Geekbench இணையதளங்களில் காணப்பட்டது. இது தவிர, போனில் சந்தையில் போட்டோ லீக் ஆகியுள்ளது, இது அதன் வெளியீட்டை உறுதிப்படுத்துகிறது.
Moto G Stylus 2023 யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக் போட்டோவில் வெளியிட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் கிளாம் பிங்க் என இரண்டு ஊக நிறங்களில் அறிமுகமாகும். கர்வ்ட் பின்புற பேனல் மற்றும் மேலே பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் ஃபோனை போட்டோவில் காட்டுகின்றன. இது தவிர, வலது மூலையில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. பவர் பட்டனுக்குள் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் மூலம் தெரிவது என்னவென்றால், Moto G Stylus 2023 போனில் ஒரு சதுர வடிவில் கேமரா பிரேம் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த G சீரிஸ் போனில் பின்புறம் டூயல் கேமரா அமைப்புடன் LED பிளாஷும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த போனின் முக்கிய கேரா 50மெகாபிக்ஸல் கொண்டிருக்கும் என புகைப்படத்தில் எழுதப்பட்டுள்ளது. செகண்டரி கேமரா 8MP அல்ட்ரா வைட் சென்சார் அல்லது 2MP மேக்ரோ டெப்த் சென்சராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் HD+ டிசிப்பிலே மற்றும் இதில் IPS LCD பேனல் கொடுக்கப்பட்டிருக்கும் .வதந்தியின் படி இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் இது 10W சார்ஜிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த G Stylus 2023 போன் மீடியாடேக் ஹீலியோ G88 SoC, மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் வேலை செய்கிறது.இந்த போனின் விலை 19,999. ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது.