48Mp கேமராவுடன் உருவாகும் ஒப்போவின் மூன்று ஸ்மார்ட்போன்கள்..!
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் 2019 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் 2019 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்கள் ஒப்போ எஃப்11, எஃப்11 ப்ரோ மற்றும் ஆர்17 நியோ என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரென்டர் வெளியாகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் கேமரா பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மா்ட்போனின் ரென்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் கலர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் புளு மற்றும் பர்ப்பிள் நிறங்களை இருக்கிறது .
அதில் ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன், பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபி கேமரா காணப்படவில்லை என்பதால் விவோ நெக்ஸ் போன்று ஒப்போ ஸ்மார்ட்போனிலும் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி். சிமாஸ் கேமரா வழங்கப்படுகிறது. இதேபோன்ற கேமரா ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்போ தவிர விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile