Oppo Reno,குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855 மற்றும் சிறப்பம்சம் யின் தகவல் லீக்

Oppo Reno,குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855 மற்றும் சிறப்பம்சம் யின் தகவல்  லீக்
HIGHLIGHTS

ஸ்மார்ட்போனின் இரண்டு வெர்ஷன்களிலும் சோனியின் IMX586 48 எம்.பி. சென்சாரும் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷன் 12 ஜி.பி. ரேமுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் PCAM00 மற்றும் PCAT00 என்ற மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. சீனாவின் TENAA வலைதளத்தில் ரெனோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியானது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனோ ஸ்மார்ட்போனில் புதிய வடிவமைப்பு கொண்ட பிரத்யேக பாப்-அப் ரக கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. பின்புறம் இரண்டு பிரைமரி கேமராவும், டாப் எண்ட் மாடலில் 10X லாஸ்லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது.ஸ்மார்ட்போனின் இரண்டு வெர்ஷன்களிலும் சோனியின் IMX586 48 எம்.பி. சென்சாரும் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷன் 12 ஜி.பி. ரேமுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo Reno ஸ்டான்டர்டு எடிஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி 8GB RAM
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3680 Mah. பேட்டரி
– பாஸ்ட் சார்ஜிங்

இந்த மொபைல் போனில் அதாவது  Oppo Reno  சீனா சந்தையில் வெல்வேறு நான்கு நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த மொபைல்  போன் உங்களுக்கு மிட்னயிட் ப்ளாக், நெபுலாஸ் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, மொபைல் போன்களின் விலை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo