வர இருக்கும் Oppo Reno ஸ்மார்ட்போனை பற்றி தொடர்ந்து பல வதந்திகள் வந்து கொண்டே தான் இருந்தது, இதனுடன் இந்த சாதனத்தின் புகைப்படத்தை பார்த்து ஒரு சில சிறப்பம்சம் கண்டறியப்பட்டது இதனுடன் இந்த சாதனம் ஏப்ரல் 10 தேதி சீனாவில் அறிமுகமாக இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தின் உலகளவிலான அறிமுகமும் வெளியே வந்துள்ளது.
Oppo வின் இந்த ப்ளாக்ஷிப் சாதனம் ஏப்ரல் 10 சீனாவில் அறிமுகமாக இருக்கிறது அதன் பிறகு ஏப்ரல் 24 உலகளவிலான சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. Zurich, Switzerland யில் நடை பெரும் நிகழ்வில் பகல் 12 மணிக்கு (5:30PM IST) அறிமுகம் செய்ய இருக்கிறது.
இது வரை வந்த லீக் மூலம் Oppo Reno ஒரு ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்போ சாதனத்தில் 5G சப்போர்டுடன் வரும் என கூறப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் 10x ஜூம் அம்சத்துடன் வரும் என கூறப்பட்டுள்ளது மேலும் MWC 2019 காணப்பட்டது
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனோ ஸ்மார்ட்போனில் புதிய வடிவமைப்பு கொண்ட பிரத்யேக பாப்-அப் ரக கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. பின்புறம் இரண்டு பிரைமரி கேமராவும், டாப் எண்ட் மாடலில் 10X லாஸ்லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது.ஸ்மார்ட்போனின் இரண்டு வெர்ஷன்களிலும் சோனியின் IMX586 48 எம்.பி. சென்சாரும் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷன் 12 ஜி.பி. ரேமுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Oppo Reno ஸ்டான்டர்டு எடிஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி 8GB RAM
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3680 Mah. பேட்டரி
– பாஸ்ட் சார்ஜிங்
இந்த மொபைல் போனில் அதாவது Oppo Reno சீனா சந்தையில் வெல்வேறு நான்கு நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த மொபைல் போன் உங்களுக்கு மிட்னயிட் ப்ளாக், நெபுலாஸ் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, மொபைல் போன்களின் விலை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை