Oppo Reno 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெருஞ்சிகொங்க

Oppo Reno 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெருஞ்சிகொங்க

Oppo அதன் Reno 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்ததது இந்த சீரிஸ் கீழ் Reno 13 மற்றும் Reno 13 pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Oppo Reno 13 5G சிறப்பம்சம்.

Oppo Reno 13 5G போனில் 6.59-இன்ச் 120Hz 1.5K Smart Adaptive Screen ஸ்க்ரீன் உடன் இதில் 1,200 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, ப்ரோசெசர் பற்றி பேசுகையில், Oppo Reno 13 யில் MediaTek Dimensity 8350 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது Mail-G615 GPU உடன் வருகிறது. இந்த ஃபோன் 8GB LPPDR5X ரேம் உடன் 256GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. வெர்சுவல் இன்டெர்னல் ஸ்டோரேஜ் உதவியுடன் ரேமை 12 ஜிபி வரை அதுகரிக்க முடியும்.

போட்டோ எடுப்பதற்காக, அதன் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ரைமரி கேமரா 50MP ஆகும். இது 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மோனோக்ரோம் கேமராவுடன் வழங்கப்பட்டுள்ளது.போனின் முன்பக்கத்தில் செல்பி எடுக்க 50எம்பி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இது வாட்டார் மற்றும் டஸ்ட் எதிர்ப்பிற்ரெசிச்டன்ட் காக IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. 80W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5600mAh பேட்டரியை இந்த ஃபோன் கொண்டுள்ளது.

Oppo Reno 13 Pro சிறப்பம்சம்

டூயல் நானோ சிம் உடன் வரும் Oppo Reno 13 Pro, Android 15 அடிப்படையிலான ColorOS 15 இல் வேலை செய்கிறது. இந்த ஃபோனில் 6.83 இன்ச் 1.5K ஸ்மார்ட் அடாப்டிவ் ஸ்கிரீன் உள்ளது. நான்கு பக்கங்களிலும் மைக்ரோ வளைந்த டிஸ்பிளேவுடன் இந்த போன் வருகிறது. இது 120Hz டைனமிக் ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே ஹை ப்ரைட்னாஸ் 1200நிட்ஸ் வரை உள்ளது.

Oppo Reno 13 Pro யில் MediaTek Dimensity 8350 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது Mail-G615 GPU உடன் வருகிறது. இந்த மொபைலில் 12ஜிபி LPPDR5X ரேம் உடன் 512ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.போட்டோக்ராபி பற்றி பேசுகையில், Oppo Reno 13 Pro 50MP ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமராவுடன் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு போனின் முன்பக்கத்தில் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் புளூடூத் 5.4 மற்றும் வைஃபை 6 சப்போர்ட் செய்கிறது . Oppo Reno 13 Pro ஆனது 80W SUPERVOOC சப்போர்டுடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.

Oppo Reno 13 5G விலை தகவல்

8ஜிபி+128ஜிபி – ரூ 37,999

8ஜிபி+ 256ஜிபி- ரூ 39,999

Oppo Reno 13 Pro விலை தகவல்

12ஜிபி+256ஜிபி- ரூ 49,999

12ஜிபி+512ஜிபி- ரூ 54,999

இரண்டு சாதனங்களும் ஜனவரி 11 முதல் Flipkart, Croma, Vijay Sales மற்றும் பலவற்றில் விற்பனைக்கு வரும். வாடிக்கையாளர்கள் 10 சதவீத கேஷ்பேக் மற்றும் 12 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI விருப்பங்களைப் பெறலாம். 3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நிறுவனம் வழங்குகிறது.

itel யின் பிரம்மாண்ட லுக்கில் வெறும் 5699ரூபாயில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo