Oppo Reno 12 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Oppo Reno 12 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

Oppo Reno 12 Series இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது,

இதில் Reno 12 மற்றும் Reno 12 Pro இரண்டு போன்களை கொண்டு வந்துள்ளது

இந்த போனில் இருக்கும் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம்.

Oppo Reno 12 Series இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது, நிறுவனம் இதில் Reno 12 மற்றும் Reno 12 Pro இரண்டு போன்களை கொண்டு வந்துள்ளது, இந்த போன்கள் கடந்த ஆண்டு வெளியான ரெனோ 11 சீரிச்ன் வாரிசுகள். ரெனோ 12 சீரிஸ் சீனா மற்றும் பிற உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது இந்தியாவில் அறிமுகம் என்பது சிறப்பு. இந்த போனில் இருக்கும் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம்.

Oppo Reno 12, Reno 12 Pro விலை தகவல்

Oppo Reno 12 8GB RAM + 256GB மாடலின் விலை ரூ.32,999. இது ஆஸ்ட்ரோ சில்வர், மேட் பிரவுன் மற்றும் சன்செட் பீச் கலர் விருப்பங்களில் வருகிறது. ஜூலை 25 முதல் பிளிப்கார்ட் மற்றும் ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை நடைபெறும்.

Oppo Reno 12 Pro 12GB RAM + 256GB மாடலின் விலை ரூ.36,999. இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மாடலின் விலை ரூ.40,999. இந்த ஃபோன் ஸ்பேஸ் பிரவுன் மற்றும் சன்செட் கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது. ஜூலை 18 முதல் பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை தொடங்கும்.

Oppo Reno 12, Reno 12 Pro சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

இரண்டு ரெனோ போன்களும் 6.7 இன்ச் முழு HD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. ரெப்ராஸ் ரேட் 120 ஹெர்ட்ஸ் வரை இருக்கும். Reno 12 ஆனது Corning Gorilla Glass 7i இன் பாதுகாப்பையும், Reno 12 Pro ஆனது Victus 2 யின் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

ப்ரோசெசர்

இந்த ஃபோன்கள் MediaTek இன் Dimension 7300-Energy சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் வெவ்வேறு ரேம் மற்றும் சேமிப்பக விருப்பங்களில் வருகின்றன.

Oppo Reno 12 சீரிஸ் சமீபத்திய Android 14 யில் இயங்குகிறது. அந்த ColorOS 14.1 யின் லேயர் இருந்தாலும். இதன் பொருள் நீங்கள் சுத்தமான Android அனுபவத்தைப் பெறமாட்டீர்கள்.

கேமரா

ரெனோ சீரிஸ் கேமராக்கள் மூலம் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இந்த முறை Reno 12 யில் நிறுவனம் 50MP ப்ரைமரி கேமராவை வழங்கியுள்ளது, இது Sony LYT-600 சென்சார் ஆகும். இது 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Reno 12 Pro யில் ப்ரைமரி கேமரா 50MP ஆகும், இது சோனி LYT-600 சென்சார் ஆகும். இந்த போனில் 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50MP 2X டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. இந்த போனின் முன்புறத்தில் 50 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ரெனோ 12 சீரிஸ் 5 ஆயிரம் mAh பேட்டரியுடன் நிரம்பியுள்ளது. அவை 80 வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதியும் உள்ளது.

இதையும் படிங்க CMF Phone 1 இன்று முதல் விற்பனை ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo