OPPO Reno 10 series கண்ணை கவரும் டிசைன் உடன் விரைவில் உலகளவில் அறிமுகமாகும்,

Updated on 08-Jun-2023
HIGHLIGHTS

OPPO Reno 10 series சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது,

இப்போது,OPPO ரெனோ 10 ப்ரோ 5ஜியின் உலகளாவிய யூனிட்களின் ரெண்டர்கள் அம்சங்கள் பகிரப்பட்டுள்ளது.

OPPO Reno 10 Pro இல் செல்ஃபிக்காக இதில் பஞ்ச்-ஹோல் கட்அவுட், மெல்லிய பெசல்கள் மற்றும் கர்வ்ட் எட்ஜ்கள் ஆகியவை மேலே கொடுக்கப்பட்டுள்ளன

OPPO Reno 10 series சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது, மற்றும் இதில் மூன்று மாடல்கள் Reno 10, Reno 10 Pro, மற்றும் Reno 10 Pro+ போன்றவை அடங்கியுள்ளது, இந்த வரிசையை உலக சந்தையிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இப்போது,OPPO ரெனோ 10 ப்ரோ 5ஜியின் உலகளாவிய யூனிட்களின் ரெண்டர்கள் அம்சங்கள் பகிரப்பட்டுள்ளது.

OPPO Reno 10 Pro 5G டிசைன்

லீக்ட் ரெண்டரின் படி, OPPO Reno 10 Pro இல் செல்ஃபிக்காக இதில் பஞ்ச்-ஹோல் கட்அவுட், மெல்லிய பெசல்கள் மற்றும் கர்வ்ட் எட்ஜ்கள் ஆகியவை மேலே கொடுக்கப்பட்டுள்ளன. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளன. ஃபோனின் அடிப்பகுதியில் USB Type-C போர்ட், ஸ்பீக்கர் கிரில், SIM ட்ரே பிரிவு மற்றும் பிரைமரி மைக்ரோஃபோன் ஆகியவை அடங்கும்.

குளோபல் வேரியண்ட் டிசைனில் அப்படி என்ன வித்தியாசம் இருக்கு.

OPPO Reno 10 Pro வின் க்ளோபல் வேரியண்டடின் டிசைன் சீனா வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, இதன் மேலே டாப்பில் ஒரு கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. அதுவே  மற்ற இரண்டு சென்சார் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது இருப்பினும், மீதமுள்ள டிசைன் அதே போல் தெரிகிறது.

OPPO Reno 10 Pro எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சம்

https://twitter.com/_snoopytech_/status/1666095198936641541?ref_src=twsrc%5Etfw

Reno 10 Pro யில் ஒரு  6.7 இன்ச் யின் FHD+ OLED டிஸ்பிளே உடன் வரும் என நம்பிக்கை இருக்கிறது. இதன் ரெஸலுசன் 2412 x 1080 பிக்சல் மற்றும் இதில் 120Hz  ரெப்ரஸ் ரேட் 120Hz   உடன் வருகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் க்ளோபல் மாடலில் குவால்காம் ஸ்னாப்ட்ராகம் 778G SoC  கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் OIS  உடன் 50MP  ட்ரிப்பில் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது  இதை தவிர இதில் 4600mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வரும் என நம்பப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :