digit zero1 awards

மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்…!

மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்…!
HIGHLIGHTS

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே பிங்காரப்ரின்ட் சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற பிங்காரப்ரின்ட் சென்சார் கொண்ட மாடல்கள் உருவாகின்றன.

அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஆர்17 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மாட்யூல்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கின்றன. கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

ஒப்போ ஆர்17 மாடலின் மற்றொரு போட்டோவில் F9/F9 ப்ரோ போன்ற நாட்ச், பின்புறம் டூயல் கேமரா செட்டப் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதிலும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒப்போ ஆர்17 மாடலில் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒப்போ மாடல்களில் 6.3 இன்ச், 2280×1080 பிக்சல் ஃபுல் HD  பிளஸ் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் TENAA மூலம் சான்று பெறும் போது இவற்றின் முழு விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo