ஒப்போ நிறுவனம் ஒப்போ பேட் மூலம் கடந்த ஆண்டு டேப்லெட் சந்தையில் களமிறங்கியது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் ஒப்போ பேட் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் சீனாவில் புதிய ஃபைண்ட் X6 மற்றும் ஃபைண்ட் X6 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
சீன சந்தையில் ஒப்போ பேட் 2 விலை 2 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 36 ஆயிரத்து 061 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 3 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 071 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை மார்ச் 24 ஆம் தேதி துவங்குகிறது. இதன் சர்வதேச வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
புதிய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்போ பேட் 2 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஒப்போ பேட் 2 மாடலில் 11.61 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, டால்பி விஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2800×2000 பிக்சல் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், 13MP பிரைமரி கேமரா, 4K வீடியோ வசதி, 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
ஒப்போ பேட் 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே பிராசஸர் விவோ பேட் 2 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாத வாக்கில் இந்த டேப்லெட் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புதிய ஒப்போ பேட் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13 ஃபார் பேட் 13 வழங்கப்பட்டு இருக்கிறது. 9510 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒப்போ பேட் 2 மாடல் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வைபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது. ஒப்போ பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்-இன் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் ஏப்ரல் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.