Oppo Find X8 விற்பனையில் மிக பெரிய சாதனை

Oppo Find X8 விற்பனையில் மிக பெரிய சாதனை

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Oppo சமிபத்தில் அதன் Oppo Find X8 சீரிஸ் அறிமுகம் செய்தது. இந்தத் சீரிஸ் Find X8 மற்றும் Find X8 Pro ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த ஸ்மார்ட்போன் தொடரின் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் சீனாவில் விற்பனையாகியுள்ளன. இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிக விற்பனையான சாதனை இதுவாகும்.

Find X8 சீரிஸ் நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை இத்தாலி, ஸ்பெயின், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் புதிய சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் தொடரின் ஆரம்ப விற்பனையானது, நிறுவனத்தின் முந்தைய தொடரை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Canalys யின் டேட்டாக்களின்படி, உலகின் 14 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் ($500க்கு மேல் விலை) முதல் மூன்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் Oppo ஒன்றாகும்.

வேறு சில சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விலையை குறைத்து விற்பனையை அதிகரிக்க ஒரு உத்தியை உருவாக்கியுள்ளன. இருப்பினும், Oppo தயாரிப்பை மேம்படுத்துவதிலும் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மீண்டும் அந்நிறுவனத்தின் பொருட்களை வாங்கி அதன் விற்பனை அதிகரித்து வருகிறது.

Oppo யின் இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் கீழ் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் Dimensity 9400 கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்கள் கேமிங்கிற்கு சிறந்தவை மற்றும் அவற்றின் பேட்டரிகள் நீண்ட காலம் நீடிக்கும்.

Find X8 யில் 6.59 இன்ச் யின் 1.5K 120Hz AMOLED பிளாட் டிஸ்ப்ளே மற்றும் Find X8 Pro யில் 6.8 இன்ச் யின் 1.5K 1-120Hz LTPO மைக்ரோ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ColorOS 15 இல் இயங்குகிறது. Find X8 Pro இன் 5,910 mAh பேட்டரி 80 W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Find N5 விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். இது கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட Find N3க்கு மாற்றாக இருக்கும். சில கசிவுகள் இந்த புத்தக-பாணி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளிப்படுத்தியுள்ளன. , சில சர்வதேச சந்தைகளில் இது OnePlus Open 2 ஆகக் கொண்டு வரப்படலாம். OnePlus Open ஆனது Find N3 யின் ரீப்ரான்ட் வெர்சனாகும் . Find N5 அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்படலாம். இந்த போல்டபில் ஸ்மார்ட்போனில் குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலியாக இருக்கலாம்.

இதையும் படிங்க: Lava யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo